தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்கொடியர் எனக்கூறல் நொந்து.
toTiyoTu tOLnEkizha nOval avaraikkoTiyAr enakkURal nontu
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
வளையல்கள் கழலும்படி என் தோள்கள் மெலிவடைந்ததைக் கண்டு, ஊராரும் தோழியும் என் காதலரைக் 'கொடியவர்' என்று பழித்துப் பேசுவதைக் கேட்டு, என் மனம் மிகவும் புண்பட்டு நொந்து போகின்றேன்!
• தொடியொடு தோள் நெகிழ = வளையல்கள் கழலும்படி என் தோள்கள் மெலிவடைந்ததைக் கண்டு;• அவரைக் கொடியர் எனக் கூறல் = ஊராரும் தோழியும் என் காதலரைக் 'கொடியவர்' என்று பழித்துப் பேசுவதைக் கேட்டு,• நொந்து நோவல் = என் மனம் மிகவும் புண்பட்டு நொந்து போகின்றேன்!
Murugaa simple commentary
Seeing my shoulders become thin so that bangles slip off, hearing the townspeople and my friend speak reproachfully calling my lover 'cruel', my heart is greatly wounded and I grieve!
• As shoulders loosen along with bangles = Seeing my shoulders become thin so that bangles slip off;• Calling him cruel = Hearing the townspeople and my friend speak reproachfully calling my lover 'cruel',• Grieving and aching = My heart is greatly wounded and I grieve!
Machine translation from the Tamil
மு.வரதராசன்
வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.
பரிமேலழகர்
(தான் ஆற்றுதற் பொருட்டு இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) தொடியோடு தோள்நெகிழ - யான் ஆற்றவும், என்வயத்தவன்றித் தொடிகள் கழலுமாறு தோள்கள் மெலிய; அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து நோவல் - அவற்றைக் கண்டு, நீ அவரைக் கொடியர் எனக் கூறுதலைப் பொறாது யான் என்னுள்ளே நோவா நின்றேன். (ஒடு - மேல் வந்த பொருண்மைத்து. 'யான் ஆற்றேனாகின்றது அவர் வாராததற்கன்று; நீ கூறுகின்றதற்கு' என்பதாம்.)
Parimelazhagar
(Spoken by the heroine to her female friend who blamed his nature in order to console her.) With bracelets, shoulders thinning, though I bear it, my shoulders grow thin beyond my control so that the bracelets slip off; saying he is cruel, I suffer in pain, seeing those, unable to bear your calling him cruel, I suffer inwardly. (The particle 'odu' has the meaning that appeared earlier. It means, 'My being unable to bear it is not because of his not coming; it is because of what you are saying.')
Machine translation from the Tamil
சாலமன் பாப்பையா
வளையல்கள் கழன்று தோள்கள் மெலிய, அவரைக் கொடுமையானவர் என்று அவை நொந்து பேசுவதைக் கேட்டு நான் வருந்துகிறேன்.
Meaning in English
I grieve, 'tis pain to me to hear him cruel chid, Because the armlet from my wasted arm has slid

