Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1235

இன்பத்துப்பால்கற்பியல்124. உறுப்புநலனழிதல்

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடுதொல்கவின் வாடிய தோள்.

koTiyAr koTumai uraikkum toTiyoTutolkavin vATiya tOL

Srividya Subramanian

பொருள் / உரை

முருகா எளிய உரை

பொன் வளையல்கள் கழலவும், முன்னிருந்த இயற்கை அழகு வாடவும் மெலிந்துபோன என் தோள்கள், என்னை விட்டுப் பிரிந்து வாழும் அந்தக் காதலரின் அன்பற்ற கொடுமையை ஊருக்கு வெளிப்படையாக எடுத்துரைக்கின்றன!

• தொடியொடு தொல் கவின் வாடிய தோள் = பொன் வளையல்கள் கழலவும், முன்னிருந்த இயற்கை அழகு வாடவும் மெலிந்துபோன என் தோள்கள்;• கொடியார் கொடுமை உரைக்கும் = என்னை விட்டுப் பிரிந்து வாழும் அந்தக் கொடியவரின் அன்பற்ற கொடுமையை ஊருக்கு வெளிப்படையாக எடுத்துரைக்கின்றன!

மு.வரதராசன்

வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு, வாடிய தோள்கள் (என் துன்பம் உணராத) கொடியவரி்ன கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன.

பரிமேலழகர்

(இதுவும் அது.) கொடியார் கொடுமை உரைக்கும் - கவவுக்கை நெகிழினும் ஆற்றாதாட்கு இக்கால நீட்டத்து என்னாம் என்று நினையாத கொடியாரது கொடுமையைத் தாமே சொல்லாநின்றன; தொடியோடு தொல் கவின் வாடியதோள் - வளைகளும் கழன்று பழைய இயற்கை அழகும் இழந்த இத்தோள்கள், இனி அதனை யாம் மறைக்குமாறு என்னை? ('உரைக்கும்' என்பது அப்பொருண்மை தோன்ற நின்ற குறிப்புச் சொல். ஒடு - வேறு வினைக்கண் வந்தது. 'அவரோடு கலந்த தோள்களே சொல்லுவனவானால், அயலார் சொல்லுதல் சொல்ல வேண்டுமோ'? என்பதாம்.)

சாலமன் பாப்பையா

வளையல்கள் கழல, முன்னைய இயற்கை அழகையும் இழந்த என் தோள்கள் கொடிய அவரின் கொடுமையைப் பேசுகின்றன.

Meaning in English

These wasted arms, the bracelet with their wonted beauty gone, The cruelty declare of that most cruel one

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout