Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1232

இன்பத்துப்பால்கற்பியல்124. உறுப்புநலனழிதல்

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்பசந்து பனிவாரும் கண்.

nayantavar nalkAmai solluva pOlumpasantu panivArum kaN

Rajeevi Ganesh

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒளியிழந்து பசலை நிறம் கொண்டு ஓயாமல் கண்ணீர் சொரியும் என் கண்கள், நான் ஆசையோடு விரும்பிய என் காதலர் என்மேல் அன்பு காட்டாமல் பிரிந்து நிற்கும் கொடுமையை ஊரார் அனைவருக்கும் வெளிப்படையாகச் சொல்லி அறிவிப்பது போல் உள்ளன!

• பசந்து பனி வாரும் கண் = ஒளியிழந்து பசலை நிறம் கொண்டு கண்ணீர் சொரியும் என் கண்கள்;• நயந்தவர் நல்காமை = நான் ஆசையோடு விரும்பிய என் காதலர் என்மேல் அன்பு காட்டாமல் பிரிந்து வாழும் கொடுமையை,• சொல்லுவ போலும் = ஊரார் அனைவருக்கும் வெளிப்படையாகச் சொல்லி அறிவிப்பது போல் உள்ளன!

மு.வரதராசன்

பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன.

பரிமேலழகர்

பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதைச் சொல்லிக் காட்டுகின்றன.

சாலமன் பாப்பையா

பசந்து, நீர் சிந்தும் கண்கள், நான் விரும்பியவர் என்னை விரும்பவில்லை என்பதைப் பிறர்க்குச் சொல்லும் போலும்!

Meaning in English

The eye, with sorrow wan, all wet with dew of tears, As witness of the lover's lack of love appears

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout