Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1230

இன்பத்துப்பால்கற்பியல்123. பொழுதுகண்டிரங்கல்

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலைமாயும்என் மாயா உயிர்.

poruLmAlai yALarai uLLi maruLmAlaimAyumen mAyA uyir

Sandra Shibu

பொருள் / உரை

முருகா எளிய உரை

காதலை விடப் பொருளீட்டுவதையே பெரிதாகக் கொண்டு பிரிந்து சென்ற என் காதலரை நினைத்து ஏங்கி, மயக்கம் தரும் இந்த மாலைப் பொழுதில் இதுவரை பிரிவைத் தாங்கி அழியாமல் நின்ற என் உயிரும் மடிந்து போகின்றது!

• பொருள் மாலையாளரை உள்ளி = காதலை விடப் பொருளீட்டுவதையே முதன்மையாகக் கொண்டு பிரிந்து சென்ற என் காதலரை நினைத்து;• மருள் மாலை = மயக்கம் தரும் இந்த மாலைப் பொழுதில்,• என் மாயா உயிர் மாயும் = இதுவரை பிரிவைத் தாங்கி அழியாமல் நின்ற என் உயிரும் இப்போது அழிகின்றது!

மு.வரதராசன்

( பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.

பரிமேலழகர்

(இதுவும் அது.) மாயா என் உயிர் -காதலர் பிரிவைப் பொறுத்து இறந்துபடாதிருந்த என் உயிர்; பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை மாயும் - இன்று பொருளியல்பே தமக்கியல்பாக உடையவரை நினைந்து, இம்மயங்கும் மாலைக்கண்ணே இறந்துபடாநின்றது. ('குறித்த பருவம் கழியவும், பொருள் முடிவு நோக்கி வாராமையின் சொல் வேறுபடாமையாகிய தம்மியல்பு ஒழிந்தவர் அப்பொருளியல்பே தம் இயல்பாயினார், காலம் இதுவாயிற்று, இனி நீ சொல்கின்றவாற்றால் பயனில்லை', என்பதாம்.)

சாலமன் பாப்பையா

அவர் என்னைப் பிரிந்தபோது பொறுத்துக் கொண்ட என் உயிர், பொருள் மயக்கமே பெரிதாக உடைய அவரை நினைத்து மயங்கும் இந்த மாலைப் பொழுதில் மடிகின்றது.

Meaning in English

This darkening eve, my darkling soul must perish utterly; Remembering him who seeks for wealth, but seeks not me

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout