Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1229

இன்பத்துப்பால்கற்பியல்123. பொழுதுகண்டிரங்கல்

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டுமாலை படர்தரும் போழ்து.

patimaruNTu paital uzhakkum matimaruNTumAlai paTartarum pOzhtu

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

அனைவரின் அறிவும் கலங்கும்படியாக மாலைப் பொழுது எங்கும் இருளைப் பரப்பி வரும் போது, என் பிரிவுத் துயரத்தின் முடிவைக் கண்டு இந்த ஊர் மக்கள் அனைவரும் கலங்கிப் பெருந்துன்பத்தில் வாடுவார்கள்!

• மதி மருண்டு = அறிவு மயங்கும்படியாக,• மாலை படர்தரும் போழ்து = மாலைப் பொழுது எங்கும் இருளைப் பரப்பி வரும் போது;• பதி மருண்டு பைதல் உழக்கும் = இந்த ஊர் மக்கள் அனைவரும் என் நிலையை எண்ணி மயங்கிப் பெருந்துன்பத்தில் வாடுவார்கள்!

மு.வரதராசன்

அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.

பரிமேலழகர்

(இதுவும் அது.) (இதற்கு முன்னெல்லாம் யானே மயங்கி நோயுழந்தேன்) மதி மருண்டு மாலை படர்தரும் போழ்து - இனிக் கண்டாரும் மதி மருளும் வகை மாலை வரும்பொழுது; பதி மருண்டு பைதல் உழக்கும் - இப்பதியெல்லாம் மயங்கி நோயுழக்கும். ('மதி மருள' என்பது 'மதி மருண்டு' எனத் திரிந்து நின்றது. கூற்றமாகக் கருதிக் கூறினாளாகலின் 'மாலை படர்தரும் போழ்து' என்றாள். 'யான் இறந்து படுவல்' என்பதாம். 'மாலை மயங்கி வரும் போழ்து என் மதி நிலை கலங்கி நோயும் உழக்கும்' என்று உரைப்பாரும் உளர்.)

சாலமன் பாப்பையா

இதற்கு முன்பு நான் மட்டும்தான் மயங்கித் துன்புற்றேன்; இனிப் பார்த்தவர் எல்லாம் மதி மயங்கும்படி மாலைப் பொழுது வரும்போது இந்த ஊரே மயங்கித் துன்பப்படும்.

Meaning in English

If evening's shades, that darken all my soul, extend; From this afflicted town will would of grief ascend

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout