Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1228

இன்பத்துப்பால்கற்பியல்123. பொழுதுகண்டிரங்கல்

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்குழல்போலும் கொல்லும் படை.

azhalpOlum mAlaikkuk tUtAki AyankuzhalpOlum kollum paTai

RANDOM VIEWS

பொருள் / உரை

முருகா எளிய உரை

நெருப்பைப் போல என்னைச் சுட்டெரிக்கும் மாலைப் பொழுதின் வருகையை அறிவிக்கும் தூதுவனாக ஆயனுடைய புல்லாங்குழல் ஒலிப்பது மட்டுமன்றி, என் உயிரைப் பறிக்கும் கொடிய போர்க் கருவியாகவும் மாறித் தாக்குகின்றது!

• அழல் போலும் மாலைக்கு = நெருப்பைப் போல என்னைச் சுட்டெரிக்கும் மாலைப் பொழுதின் வருகையை அறிவிக்கும்;• தூது ஆகி = தூதுவனாக ஆயனுடைய புல்லாங்குழல் ஒலிப்பது மட்டுமன்றி,• ஆயன் குழல் கொல்லும் படை போலும் = என் உயிரைப் பறிக்கும் கொடிய போர்க் கருவியாகவும் மாறித் தாக்குகின்றது!

மு.வரதராசன்

ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும்‌ மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும்‌‌ படையாகவும் வருகின்றது.

பரிமேலழகர்

(இதுவும் அது.) ஆயன் குழல் - முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல்; அழல் போலும் மாலைக்குத் தூதாகி - இது பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய்; கொல்லும்படை-அது வந்து என்னை கொல்வுழிக் கொல்லும் படையும் ஆயிற்று. (பின்னின்ற 'போலும்' என்பது உரையசை. முன்னரே வரவுணர்த்தலின் தூதாயிற்று; கோறற் கருவியாகலின் படையாயிற்று. 'தானே சுடவல்ல மாலை, இத்துணையும் பெற்றால் என் செய்யாது'? என்பதாம்.)

சாலமன் பாப்பையா

முன்பு இனிதாய் ஒலித்த ஆயனின் புல்லாங்குழல் இப்போது நெருப்பாய்ச் சுடும் மாலைப் பொழுதிற்கு் தூதானது மட்டும் அன்றி, என்னைக் கொல்லும் ஆயுதமுமாகிவிட்டது.

Meaning in English

The shepherd's pipe is like a murderous weapon, to my ear, For it proclaims the hour of ev'ning's fiery anguish near

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout