மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாதகாலை அறிந்த திலேன்.
mAlainOy seytal maNantAr akalAtakAlai aRinta tilEn
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
என்னை மணந்த என் காதலர் என்னைப் பிரியாமல் என்னோடு உடனிருந்த காலத்தில், இந்த மாலைப் பொழுதானது உயிரையே வாட்டும் இத்தகைய பெருந்துன்பத்தை விளைவிக்கும் என்பதை நான் சிறிதும் அறிந்திருக்கவில்லை!
• மணந்தார் அகலாத காலை = என்னை மணந்த என் காதலர் என்னைப் பிரியாமல் உடனிருந்த காலத்தில்;• மாலை நோய் செய்தல் = இந்த மாலைப் பொழுது இவ்வளவு கொடிய பிரிவுத் துன்பத்தை உண்டாக்கும் என்பதை,• அறிந்தது இலேன் = நான் சிறிதும் உணர்ந்திருக்கவில்லை!
மு.வரதராசன்
மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.
பரிமேலழகர்
('இன்று இன்னையாகின்ற நீ, அன்று அவர் பிரிவிற்கு உடம்பட்டது என்னை'? என்றாட்குச் சொல்லியது.)மாலை நோய் செய்தல் -முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ்செய்து போந்த மாலை இன்று பகையாய்த் துன்பஞ்செய்தலை; மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன் -காதலர் பிரிதற்கு முன்னே அறியப் பெற்றிலேன். ('இங்ஙனம் வேறுபடுதல் அறிந்திலேன்: அறிந்தேனாயின், அவர் பிரிவிற்கு உடம்படேன்', என்பதாம்.)
சாலமன் பாப்பையா
முன்பு எனக்கு மகிழ்ச்சி தந்த மாலைப்பொழுது இப்படித் துன்பம் தரும் என்பதை, என்னை மணந்த காதலர் என்னைப் பிரிவதற்கு முன்பு நான் அறிந்தது கூட இல்லை.
Meaning in English
The pangs that evening brings I never knew, Till he, my wedded spouse, from me withdrew





