Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1225

இன்பத்துப்பால்கற்பியல்123. பொழுதுகண்டிரங்கல்

காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்மாலைக்குச் செய்த பகை.

kAlaikkus seytanan Renkol evankolyAnmAlaikkus seyta pakai

VY THA RA MOORTHI வை தா ர மூர்த்தி

பொருள் / உரை

முருகா எளிய உரை

இரவின் நீண்ட துயரத்தைத் தணித்து அமைதி தரும் காலைப் பொழுதிற்கு நான் செய்த கைம்மாறு என்ன? என்னைப் பிரிவுத் துயரால் வாட்டி வதைக்கும் இந்த மாலைப் பொழுதிற்கு நான் செய்த கொடிய தீமைதான் என்னவோ?

• காலைக்கு யான் செய்த நன்று என் கொல் = இரவின் துயரத்தைத் தணித்து விடியும் காலைப் பொழுதிற்கு நான் செய்த உதவி என்ன?• மாலைக்கு யான் செய்த பகை எவன் கொல் = என்னைப் பிரிவுத் துயரில் ஆழ்த்தி வாட்டும் இந்த மாலைப் பொழுதிற்கு நான் செய்த தீமைதான் என்னவோ?

மு.வரதராசன்

யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?

பரிமேலழகர்

(இதுவும் அது.) (காலையும், மாலையும், அவர் கூடிய ஞான்று போலாது இஞ்ஞான்று வேறுபட்டு வாராநின்றன; அவற்றுள்) யான் காலைக்குச் செய்த நன்று என் - யான் காலைக்குச் செய்த உபகாரம் யாது? மாலைக்குச் செய்த பகை எவன் - மாலைக்குச் செய்த அபகாரம் யாது? (கூடிய ஞான்று பிரிவர் என்று அஞ்சப்பண்ணிய காலை, அஃது ஒழிந்து இஞ்ஞான்று கங்குல் வெள்ளத்திற்குக் கரையாய் வாராநின்றது என்னும் கருத்தால், 'நன்று என்கொல்' என்றும், 'கூடிய ஞான்று இன்பம் செய்து வந்த மாலை அஃது ஒழிந்து இஞ்ஞான்றும் அளவில் துன்பஞ் செய்யாநின்றது' என்னும் கருத்தால், 'பகை எவன்கொல்'? என்றும் கூறினாள். பகை - ஆகுபெயர். தன்னோடு ஒத்த காலைபோலாது மாலை தன் கொடுமையால் துன்பம் செய்யாநின்றது என்பதாம்.)

சாலமன் பாப்பையா

காலைக்கு நான் செய்த நன்மை என்ன? மாலைக்கு நான் செய்த தீமை என்ன?

Meaning in English

O morn, how have I won thy grace? thou bring'st relief O eve, why art thou foe! thou dost renew my grief

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout