Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1224

இன்பத்துப்பால்கற்பியல்123. பொழுதுகண்டிரங்கல்

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்துஏதிலர் போல வரும்.

kAtalar ilvazhi mAlai kolaikkaLattEtilar pOla varum

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

என் காதலர் என்னோடு உடனிருந்த காலத்தில் இன்பம் தந்த இந்த மாலைப் பொழுது, அவர் இல்லாத இந்தத் தனிமை நேரத்தில் கொலைக்களத்தில் உயிரைப் பறிக்க வரும் இரக்கமற்ற கொலையாளியைப் போல என் உயிரை முடிக்க வருகின்றது!

• காதலர் இல்வழி = என் காதலர் என்னோடு இல்லாத இந்தத் தனிமை நேரத்தில்,• மாலை = இந்த மாலைப் பொழுதானது;• கொலைக்களத்து ஏதிலர் போல = கொலைக்களத்தில் உயிரைப் பறிக்க வரும் இரக்கமற்ற பகைவர்களைப் போல,• வரும் = என் உயிரை முடிப்பதற்காகவே அச்சுறுத்தி வருகின்றது!

மு.வரதராசன்

காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது ( என் உயிரைக் கொள்ள) வருகின்றது.

பரிமேலழகர்

(இதுவும் அது.) மாலை - காதலர் உள்ள பொழுதெல்லாம் என் உயிர் தளிர்ப்ப வந்த மாலை; காதலர் இல்வழி - அவர் இல்லாத இப்பொழுது; கொலைக்களத்து ஏதிலர் போல வரும் - அஃது ஒழிந்து நிற்றலே அன்றிக் கொல்லுங்களரியில் கொலைஞர் வருமாறுபோல அவ்வுயிரைக் கோடற்கு வாராநின்றது. (ஏதிலர் - அருள் யாதுமில்லார். 'முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ்செய்து வந்த பொழுதும், இன்று என்மேற் பகையாய்த் துன்பஞ்செய்து வாரா நின்றது. இனி யான் ஆற்றுமாறு என்னை'? என்பதாம்.)

சாலமன் பாப்பையா

அவர் என்னைப் பிரியாமல் என்னுடன் இருந்தபோது எல்லாம் என் உயிர் வளர வந்த இந்த மாலைப் பொழுது, அவர் என்னைப் பிரிந்து இருக்கும் இப்போது, கொலைக் காலத்திற்கு வரும் கொலையாளிகள் போலக் கருணை இல்லாமல் வருகிறது.

Meaning in English

When absent is my love, the evening hour descends, As when an alien host to field of battle wends

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout