Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1223

இன்பத்துப்பால்கற்பியல்123. பொழுதுகண்டிரங்கல்

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்துன்பம் வளர வரும்.

paniyarumpip paitalkoL mAlai tuniyarumpittunpam vaLara varum

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

குளிர்ச்சியான பனி படர்ந்து மங்கிய இருளோடு வரும் இந்த மாலைப் பொழுதானது, காதலரோடு கூடியிருந்த நாளில் அஞ்சி அடங்கி வந்த நிலை மாறி, இப்போது என்னுள் பெருந்துன்பமும் வாழ்வின் மீதான வெறுப்பும் மேலும் மேலும் வளரும்படி வந்து தாக்குகின்றது!

• பனி அரும்பி = குளிர்ச்சியான பனித்துளிகள் தோன்றி,• பைதல் கொள் மாலை = மங்கிய இருள் படர்ந்து வரும் இந்த மாலைப் பொழுதானது;• துனி அரும்பி = காதலரோடு கூடியிருந்த நாளில் பயந்து நடுங்கி வந்த நிலை மாறி, இப்போது என் மனதில் வெறுப்புத் தோன்றி,• துன்பம் வளர வரும் = பிரிவுத் துயரமானது மேன்மேலும் பெருகும்படியாக வந்து தாக்குகின்றது!

மு.வரதராசன்

பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது.

பரிமேலழகர்

(ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது.) பனி அரும்பிப் பைதல்கொள் மாலை - காதலர் கூடிய நாளெல்லாம் என்முன் நடுக்கம் எய்திப் பசந்து வந்த மாலை; துனி அரும்பித் துன்பம் வளர வரும் - இந்நாள் எனக்கு இறந்துபாடு வந்து தோன்றி அதற்கு உளதாம் துன்பம் ஒரு காலைக்கு ஒருகால் மிக வாராநின்றது.(குளிர்ச்சி தோன்ற மயங்கிவருமாலை என்னுஞ் செம்பொருள் இக்குறிப்புணர நின்றது. துனி - உயிர் வாழ்தற்கண் வெறுப்பு. 'அதனால் பயன் ஆற்றுமாறு என்னை'? என்பது குறிப்பெச்சம்.)

சாலமன் பாப்பையா

அவர் என்னைப் பிரிவதற்கு முன்பு என்முன் வரவே நடுக்கம் எய்தி மேனி கறுத்து வந்த இந்த மாலைப் பொழுது இப்போது எனக்குச் சாவு வரும்படி தோன்றி, அதற்கான துன்பம் பெருகும்படி நாளும் வருகின்றது.

Meaning in English

With buds of chilly dew wan evening's shade enclose; My anguish buds space and all my sorrow grows

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout