Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1221

இன்பத்துப்பால்கற்பியல்123. பொழுதுகண்டிரங்கல்

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்வேலைநீ வாழி பொழுது.

mAlaiyO allai maNantAr uyiruNNumvElainI vAzhi pozhutu

Anamika

பொருள் / உரை

முருகா எளிய உரை

பொழுதே! நீ முன்பு என் காதலரோடு கூடியிருந்த காலத்தில் மகிழ்வூட்டிய இனிய மாலைக்காலம் அல்ல; காதலரை மணந்து இப்போது பிரிவால் வாடும் பெண்களின் உயிரைக் குடித்துவிடும் இறுதிக் காலமாய் வந்து நிற்கின்றாய்!

• பொழுதே = மாலைப் பொழுதே!• நீ மாலையோ அல்லை = முன்பு காதலரோடு இன்புற்றிருந்த நாளில் வந்த இனிய மாலைக்காலம் அல்ல நீ;• மணந்தார் உயிர் உண்ணும் வேலை நீ = காதலரை மணந்து இப்போது பிரிவால் வாடும் பெண்களின் உயிரைக் குடிக்கும் இறுதிக் காலமாய் இருக்கின்றாய்;• வாழி = நீ நெடுங்காலம் வாழ்வாயாக!

மு.வரதராசன்

பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்!

பரிமேலழகர்

(பொழுதொடு புலந்து சொல்லியது.) பொழுது - பொழுதே; நீ மாலையோ அல்லை - நீ முன்னாள்களின் வந்த மாலையோ எனின் அல்லை; மணந்தார் உயிர் உண்ணும் வேலை - இருந்த ஆற்றான் அந்நாள் காதலரை மணந்த மகளிர் உயிரையுண்ணும் இறுதிக்காலமாய் இருந்தாய். (முன்னாள் - கூடியிருந்த நாள். 'அந்நாள் மணந்தார்' எனவே, பின் பிரிந்தாராதல் பெறுதும். வாழி என்பது குறிப்புச் சொல். 'வாலிழை மகளிர் உயிர்ப்பொதி அவிழ்க்குங்காலை' (கலித்.நெய்தல்.2) என்றாற்போல, ஈண்டுப் பொதுமையாற் கூறப்பட்டது. 'மாலை நீ அல்லை' எனவும் பாடம். வேலை என்பது ஆகுபெயர். வேலை என்பதற்கு வேலாயிருந்தாய் என்பாரும் உளர்.)

சாலமன் பாப்பையா

பொழுதே! நீ வாழ்க! முன்பெல்லாம் வருவாயே அந்த மாலையா நீ என்றால் இல்லை; திருமணம் செய்து கொண்ட பெண்களின் உயிரை வாங்கும் பொழுது நீ.

Meaning in English

Thou art not evening, but a spear that doth devour The souls of brides; farewell, thou evening hour

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout