Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1220

இன்பத்துப்பால்கற்பியல்122. கனவுநிலையுரைத்தல்

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்காணார்கொல் இவ்வூ ரவர்.

nanavinAn namnIttAr enpar kanavinAnkANArkol ivvU ravar

Kanmani Anbarasan

பொருள் / உரை

முருகா எளிய உரை

இந்த ஊரில் உள்ள பெண்கள், 'நனவில் அவர் இவளைப் பிரிந்து சென்றுவிட்டார்' என்று என் காதலரைக் குற்றஞ்சாட்டிக் குறை கூறுகின்றார்களே; அவர் நாள்தோறும் என் கனவில் இடைவிடாமல் வந்து தோள் தழுவி அன்பு செய்வதை அவர்கள் அறிய மாட்டார்களோ?

• இவ்வூரவர் = இந்த ஊரில் உள்ள பெண்கள்,• நனவினால் நம் நீத்தார் என்பர் = 'நனவில் அவர் நம்மைப் பிரிந்து விட்டுச் சென்றுவிட்டார்' என்று என் காதலரை ஏசிப் பழித்துப் பேசுகின்றார்களே;• கனவினால் காணார்கொல் = அவர் நாள்தோறும் என் கனவில் இடைவிடாமல் வந்து தழுவுவதை அவர்கள் அறிய மாட்டார்களோ?

மு.வரதராசன்

நனவில் நம்‌மை விட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்து பேசுகின்றனரே! இந்த ஊரார் கனவில் அவரைக் காண்பதில்லையோ?

பரிமேலழகர்

(இதுவும் அது.) இவ்வூரவர் நனவினான் நம் நீத்தார் என்பார் - மகளிர் நனவின்கண் நம்மை நீத்தார் என்று நம் காதலரைக் கொடுமை கூறாநிற்பார்; கனவினான் காணார்கொல் - அவர் கனவின்கண் நீங்காது வருதல் கண்டறியாரோ? ('என்னொடு தன்னிடை வேற்றுமை இன்றாயின், யான் கண்டது தானும் கண்டமையும், அது காணாது அவரைக் கொடுமை கூறுகின்றமையின் அயலாளேயாம்' என்னும் கருத்தால், 'இவ்வூரவர்' என்றாள்.)

சாலமன் பாப்பையா

என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டார் என்று என்னவரை ஏசும் இவ்வூர்ப் பெண்கள், அவர் நாளும் என் கனவில் வருவதைக் கண்டு அறியாரோ?

Meaning in English

They say, that he in waking hours has left me lone; In dreams they surely see him not,- these people of the town;

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout