Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1219

இன்பத்துப்பால்கற்பியல்122. கனவுநிலையுரைத்தல்

நனவினால் நல்காரை நோவர் கனவினால்காதலர்க் காணா தவர்.

nanavinAn nalkArai nOvar kanavinAnkAtalark kANA tavar

Preeti Iyer

பொருள் / உரை

முருகா எளிய உரை

கனவில் தம் காதலரைக் கண்டு தழுவும் பேரின்பத்தைப் பெறாத பெண்கள்தான், 'நனவில் நேரில் வந்து இவர் அன்பு காட்டவில்லையே' என்று என் காதலரைக் குற்றஞ்சாட்டிக் குறை கூறுவார்கள்!

• கனவினால் காதலர்க் காணாதவர் = கனவில் தம் காதலரைக் கண்டு தழுவும் இன்பத்தைப் பெறாத பெண்களே;• நனவினால் நல்காரை நோவர் = 'நனவில் நேரில் வந்து இவர் அன்பு காட்டவில்லையே' என்று என் காதலரைக் குற்றஞ்சாட்டிக் குறை கூறுவார்கள்!

மு.வரதராசன்

கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத கா‌தலரை ( அவர் வராத காரணம் பற்றி ) நொந்து கொள்வர்.

பரிமேலழகர்

(இதுவும் அது.) கனவினான் காதலர்க் காணாதவர் - தமக்கு ஒரு காதலர் இன்மையின் அவரைக் கனவிற் கண்டறியாத மகளிர்; நனவினான் நல்காரை நோவர் - தாம் அறிய நனவின்கண் வந்து நல்காத நம் காதலரை அன்பிலர் என நோவர் நிற்பர். (இயற்பழித்தது பொறாது புலக்கின்றாள் ஆகலின், அயன்மை தோன்றக் கூறினாள். தமக்கும் காதலருளராய அவரைக் கனவிற் கண்டறிவாராயின், நம் காதலர் கனவின்கண் ஆற்றி நல்குதல் அறிந்து நோவார் என்பதாம்.)

சாலமன் பாப்பையா

இன்னும் திருமணம் ஆகாத, ஆகிக் கணவனைப் பிரிந்து அறியாத இந்தப் பெண்கள், கனவில் காதலனைக் கண்டு அறியாதவர், ஆதலால், அவர்கள் அறிய நேரில் வந்து என்னிடம் அன்பு காட்டாத என்னவரை அன்பற்றவர் என்று ஏசுகின்றனர்.

Meaning in English

In dreams who ne'er their lover's form perceive, For those in waking hours who show no love will grieve

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout