Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1218

இன்பத்துப்பால்கற்பியல்122. கனவுநிலையுரைத்தல்

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.

tunjsungkAl tOLmElar Aki vizhikkungkAlnenjsattAr Avar viraintu

Banu

பொருள் / உரை

முருகா எளிய உரை

நான் கண்களை மூடி உறங்கும் போது கனவில் வந்து என் தோள்களைத் தழுவுகின்ற என் காதலர், நான் விழித்துப் பார்க்கும் போதோ மாயமாய் மறைந்து சட்டென்று ஓடிவந்து என் நெஞ்சிற்குள்ளேயே புகுந்து கொள்கிறார்!

• துஞ்சுங்கால் தோள் மேலர் ஆகி = நான் கண்களை மூடி உறங்கும் போது கனவில் வந்து என் தோள்களைத் தழுவுகின்ற என் காதலர்;• விழிக்குங்கால் = நான் விழித்துப் பார்க்கும் போது,• விரைந்து நெஞ்சத்தர் ஆவர் = சட்டென்று ஓடிவந்து என் நெஞ்சிற்குள்ளேயே புகுந்து கொள்கிறார்!

மு.வரதராசன்

தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி, விழி்த்தெழும்போது விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகிறார்‌.

பரிமேலழகர்

(தான் ஆற்றுதற்பொருட்டுத் தலைமகனை இயற்பழித்தாட்கு இயற்பட மொழிந்தது.) துஞ்சுங்கால் தோள் மேலராகி - என் நெஞ்சு விடாது உறைகின்ற காதலர் யான் துஞ்சும் பொழுது வந்து என் தோள் மேலராய்; விழிக்குங்கால் விரைந்து நெஞ்சத்தர் ஆவர் - பின் விழிக்கும் பொழுது விரைந்து பழைய நெஞ்சின் கண்ணராவர்.(கலவி விட்டு மறையும் கடுமைபற்றி 'விரைந்து' என்றாள். ஒருகாலும் என்னின் நீங்கி அறியாதாரை நீ நோவற்பாலை யல்லை என்பதாம்.)

சாலமன் பாப்பையா

என் நெஞ்சில் எப்போதும் வாழும் என்னவர் நான் உறங்கும் போது என் தோளின் மேல் கிடக்கிறார். விழித்துக் கொள்ளும் போதோ வேகமாக என் நெஞ்சிற்குள் நுழைந்து கொள்கிறார்.

Meaning in English

And when I sleep he holds my form embraced; And when I wake to fill my heart makes haste

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout