Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1217

இன்பத்துப்பால்கற்பியல்122. கனவுநிலையுரைத்தல்

நனவினால் நல்காக் கொடியார் கனவனால்என்எம்மைப் பீழிப் பது.

nanavinAn nalkAk koTiyAr kanavinAnennemmaip pIzhip patu

Swathi Narayanan

பொருள் / உரை

முருகா எளிய உரை

விழித்திருக்கும் நனவு நேரத்தில் நேரில் வந்து அன்பு செய்யாத கொடிய மனமுடைய என் காதலர், இரவில் வரும் கனவில் மட்டும் தோன்றித் தழுவி, விழித்தவுடன் மறைந்துபோய் என்னை மேலும் வருத்துவது என்ன காரணத்தாலோ?

• நனவினால் நல்காக் கொடியார் = விழித்திருக்கும் நனவு நேரத்தில் நேரில் வந்து அன்பு செய்யாத கொடிய மனமுடைய என் காதலர்;• கனவினால் எம்மைப் பீழிப்பது என் = இரவில் வரும் கனவில் மட்டும் வந்து தோள் தழுவி, விழித்ததும் மறைந்து என்னை வருத்துவது என்ன காரணத்தாலோ?

மு.வரதராசன்

நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?

பரிமேலழகர்

(விழித்துழிக் காணளாயினாள் கனவிற் கூட்டம் நினைந்து ஆற்றாளாய்ச் சொல்லியது.) நனவினான் நல்காக் கொடியார் - ஒரு ஞான்றும் நனவின்கண் வந்து தலையளி செய்யாத கொடியவர்; கனவின்கண் வந்து எம்மைப் பீழிப்பது என் - நாள்தோறும் கனவின்கண் வந்து எம்மை வருத்துவது எவ்வியைபு பற்றி? (பிரிதலும், பின் நினைந்து வாராமையும் நோக்கிக் 'கொடியார்' என்றும் கனவில் தோள்மேலராய் விழித்துழிக் கரத்தலின், அதனானும் துன்பமாகாநின்றது என்பாள் 'பீழிப்பது' என்றும் கூறினாள். 'நனவின் இல்லது கனவினும் இல்லை' என்பர், 'அது கண்டிலம்', என்பதாம்.)

சாலமன் பாப்பையா

நேரில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடிய மனிதர் கனவில் மட்டும் நாளும் வந்து என்னை வருத்துவது ஏன்?

Meaning in English

The cruel one, in waking hour, who all ungracious seems, Why should he thus torment my soul in nightly dreams

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout