Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1214

இன்பத்துப்பால்கற்பியல்122. கனவுநிலையுரைத்தல்

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்நல்காரை நாடித் தரற்கு.

kanavinAn uNTAkum kAmam nanavinAnnalkArai nATit taraRku

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• நனவினான் நல்காரை = நனவில் நேரில் வந்து அன்பு செய்யாத என் காதலரை,• நாடித் தரற்கு = அவர் இருக்கும் தூர தேசத்திற்கே சென்று தேடிக் கொண்டு வந்து தருவதால்;• கனவினான் காமம் உண்டாகும் = அந்தக் கனவின் மூலமாகவே எனக்குப் பேரன்பின் இன்பம் கிடைக்கின்றது!எளிய விளக்கம்:நனவில் நேரில் வந்து அன்பு செய்யாத என் காதலரை, அவர் இருக்கும் தூர தேசத்திற்கே சென்று தேடிக் கொண்டு வந்து சேர்ப்பதால், அந்தக் கனவின் வழியாகவே எனக்குக் காதல் இன்பமும் மன அமைதியும் கிடைக்கின்றது!

மு.வரதராசன்

நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன.

பரிமேலழகர்

(இதுவும் அது.) நனவினான் நல்காரை நாடித்தரற்கு - நனவின்கண் வந்து தலையளி செய்யாதாரை அவர் சென்றுழி நாடிக் கொண்டு வந்து கனவு தருதலான்; கனவினான் காமம் உண்டாகும் - இக் கனவின்கண்ணே எனக்கு இன்பம் உண்டாகா நின்றது. (காமம் - ஆகுபெயர். நான்காவது மூன்றன் பொருண்மைக்கண் வந்தது. 'இயல்பான் நல்காதவரை அவர் சென்ற தேயம் அறிந்து சென்று கொண்டு வந்து தந்து நல்குவித்த கனவால் யான் ஆற்றுவல்' என்பதாம்.)

சாலமன் பாப்பையா

நேரில் வந்து அன்பு செய்யாதவரை அவர் இருக்கும் இடம் போய் அவரைத் தேடிக்கொண்டு வந்து தருவதால் கனவில் எனக்கு இன்பம் உண்டாகிறது.

Meaning in English

Some pleasure I enjoy when him who loves not me In waking hours, the vision searches out and makes me see

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout