நனவினால் நல்கா தவரைக் கனவினால்காண்டலின் உண்டென் உயிர்.
nanavinAn nalkA tavaraik kanavinAlkANTalin uNTen uyir
Sowndharya Uma
பொருள் / உரை
முருகா எளிய உரை
விழித்திருக்கும் நனவு வேளையில் நேரில் வந்து அன்பு காட்டாத என் காதலரை, இரவில் வரும் கனவிலாவது நேரில் கண்டு இன்புறுவதால்தான் என்னுடைய உயிரானது உடலை விட்டுப் பிரியாமல் இன்னும் நிலைத்து நிற்கின்றது!
• நனவினால் நல்காதவரை = விழித்திருக்கும் நனவு வேளையில் நேரில் வந்து அன்பு காட்டாத என் காதலரை;• கனவினால் காண்டலின் = இரவில் வரும் கனவிலாவது நேரில் கண்டு தழுவுவதால்தான்,• என் உயிர் உண்டு = என்னுடைய உயிரானது உடலை விட்டுப் பிரியாமல் இன்னும் நிலைத்து நிற்கின்றது!
மு.வரதராசன்
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.
பரிமேலழகர்
(ஆற்றாள் எனக் கவன்றாட்கு ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது.) நனவினான் நல்காதவரை - நனவின்கண் வந்து தலையளி செய்யாதாரை; கனவினாற் காண்டலின் என் உயிர் உண்டு - யான் கனவின்கண் கண்ட காட்சியானே என்னுயிர் உண்டாகா நின்றது. (மூன்றனுருபுகள் ஏழன் பொருண்மைக்கண் வந்தன. 'அக்காட்சியானே யான் ஆற்றியுளேன் ஆகின்றேன். நீ கவலல் வேண்டா', என்பதாம்.)
சாலமன் பாப்பையா
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.
Meaning in English
Him, who in waking hour no kindness shows, In dreams I see; and so my lifetime goes





