விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்படாஅதி வாழி மதி.
viTAatu senRAraik kaNNinAl kANappaTAati vAzhi mati
Deepika Karthik Kumar
பொருள் / உரை
முருகா எளிய உரை
வானத்து நிலவே! நீ நெடுங்காலம் வாழ்வாயாக! என் நெஞ்சை விட்டுப் பிரியாமல் நினைவிலேயே தங்கி உடலால் பிரிந்து சென்ற என் காதலரை, என் கண்களால் தேடிக் கண்டுபிடிக்கும் வரையில் நீ மேற்கு வானில் மறைந்துவிடாமல் ஒளி தருவாயாக!
• மதி வாழி = நிலவே! நீ நெடுங்காலம் வாழ்வாயாக!• விடாது சென்றாரைக் = என் நெஞ்சை விட்டுப் பிரியாமல் நினைவிலேயே இருந்து, உடலால் பிரிந்து சென்ற என் காதலரை;• கண்ணினால் காணப் = என் கண்களால் தேடிக் கண்டுபிடிக்கும் வரையில்,• படாதி = நீ மேற்கு வானில் மறைந்துவிடாமல் ஒளி தருவாயாக!
மு.வரதராசன்
தி்ங்களே! பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!
பரிமேலழகர்
(வன்புறை எதிரழிந்தாள் காமம் மிக்க கழிபடரால் சொல்லியது) மதி-மதியே; விடாது சென்றாரைக் கண்ணினால் காணப்படாதி - என் நெஞ்சின் இடைவிடாதிருந்தே விட்டுப் போயினாரை யான் என் கண்ணளவானாயினும் எதிர்ப்படும் வகை நீ படாதொழிவாயாக.(கண்ணளவான் எதிர்ப்படுதலாவது: மதி இருவரானும் நோக்கப்படுதலின் இருவர் கண்ணும் அதன் கண்ணே சேர்தல். முதலோடு சினைக்கு ஒற்றுமை உண்மையின். 'சென்றாரைக் காண'என்றும் குறையுறுகின்றாளாகலின், 'வாழி' என்றும் கூறினாள். இனிப் 'படாது' என்பது பாடமாயின், கனவிடைக் கண்ணினாற் காணுமாறு மதிபடுகின்றதில்லை என அதனால் துயில் பெறாது வருந்துகினறாள் கூற்றாக்குக. இப்பொருட்கு 'வாழி'என்பது அசை நிலை)
சாலமன் பாப்பையா
திங்களே! பிரியாமலிருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!
Meaning in English
Set not; so may'st thou prosper, moon! that eyes may see My love who went away, but ever bides with me





