Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1204

இன்பத்துப்பால்கற்பியல்121. நினைந்தவர்புலம்பல்

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்துஓஒ உளரே அவர்.

yAmum uLEngkol avarnenjsat tennenjsattOo uLarE avar

Bhargavi Sridhar

பொருள் / உரை

முருகா எளிய உரை

என் நெஞ்சத்தில் என் காதலர் ஒரு நொடியும் பிரியாமல் எப்போதும் குடிகொண்டிருக்கின்றாரே; தூர தேசம் சென்ற அவருடைய நெஞ்சத்திலும் இடைவிடாத நினைவாக நானும் அவ்வாறே இருப்பேனோ, மாட்டேனோ?

• எந்நெஞ்சத்து அவர் ஓ உளரே = என் நெஞ்சத்தில் என் காதலர் எப்போதும் இடைவிடாமல் குடிகொண்டிருக்கின்றாரே;• அவர் நெஞ்சத்து யாமும் உளேங்கொல் = அவருடைய நெஞ்சத்திலும் இடைவிடாமல் நினைவில் நானும் அவ்வாறே இருப்பேனோ, மாட்டேனோ?

மு.வரதராசன்

எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! ( அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோ‌மோ?

பரிமேலழகர்

(இதுவும் அது.) எம் நெஞ்சத்து அவர் ஓ உளரே - எம்முடைய நெஞ்சத்து அவர் எப்பொழும் உளரேயாய் இராநின்றார்; அவர் நெஞ்சத்து யாமும் உளேங்கொல் - அவ்வகையே அவருடைய நெஞ்சத்தும் யாமும் உளமாதுமோ, ஆகேமோ? (ஓகார இடைச்சொல் ஈண்டு இடைவிடாமை உணர்த்தி நின்றது. 'உளமாயும், வினை முடியாமையின் வாராராயினாரோ, அது முடிந்தும் இலமாகலின் வாராராயினாரோ?' என்பது கருத்து.)

சாலமன் பாப்பையா

என் நெஞ்சத்தில் அவர் எப்போதும் இருக்கிறார். அவர் நெஞ்சத்தில் நானும் இருப்பேனா?

Meaning in English

Have I a place within his heart! From mine, alas! he never doth depart

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout