நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்சினைப்பது போன்று கெடும்.
ninaippavar pOnRu ninaiyArkol tummalsinaippatu pOnRu keTum
Vinodini Shivaraman
பொருள் / உரை
முருகா எளிய உரை
தும்மல் வருவது போல எழுந்து சட்டென்று வாராமல் அடங்கி விடுகின்றதே; வெளியூர் சென்ற என் காதலரும் என்னை நினைக்கத் தொடங்குவது போலத் தொடங்கி, ஏதோ ஒரு செயலால் நினைக்காமல் விட்டுவிடுகிறாரோ?
• தும்மல் சினைப்பது போன்று கெடும் = எனக்குத் தும்மல் வரத் தொடங்குவது போலத் தோன்றி, சட்டென்று வராமல் அடங்கி விடுகின்றதே;• நினைப்பவர் போன்று நினையார்கொல் = வெளியூர் சென்ற என் காதலரும் என்னை நினைக்கத் தொடங்குவது போலத் தொடங்கி, அப்படியே நினைக்காமல் விட்டுவிடுகிறாரோ?
மு.வரதராசன்
தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?
பரிமேலழகர்
(தலைமகனை நினைந்து வருந்துகின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியது.) தும்மல் சினைப்பது போன்று கெடும் - எனக்குத் தும்மல் எழுவது போன்று தோன்றிக் கெடாநின்றது; நினைப்பவர் போன்று நினையார்கொல் - அதனால் காதலர் என்னை நினைப்பார் போன்று நினையாராகல் வேண்டும். (சினைத்தல்: அரும்புதல். சேய்மைக்கண்ணராய கேளிர் நினைந்துழி அந்நினைக்கப்பட்டார்க்குத் துமமல் தோன்றும் என்னும் உலகியல்பற்றித் தலைமகன் எடுத்துக்கொண்ட வினை முடிவதுபோன்று முடியாமை யுணர்ந்தாள் சொல்லியதாயிற்று.)
சாலமன் பாப்பையா
எனக்குத் தும்மல் வருவது போல் வந்து அடங்கி விடுகிறது. அவர் என்னை நினைக்கத் தொடங்கி, நினைக்காமல் விடுவாரோ?
Meaning in English
A fit of sneezing threatened, but it passed away; He seemed to think of me, but do his fancies stray





