எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்நினைப்ப வருவதொன்று ஏல்.
enaitton RinitEkAN kAmantAm vIzhvArninaippa varuvaton Ril
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
தாம் உயிராக விரும்பும் காதலரின் இனிய நினைவுகளை நெஞ்சில் எண்ணிப் பார்க்கும்போது, பிரிவால் வரக்கூடிய எந்தத் துன்பமும் நம்மை அண்டுவதில்லை; எனவே காதல் என்பது எப்போதும் எல்லையற்ற பேரினிமை கொண்டதே ஆகும்!
• தாம் வீழ்வார் நினைப்ப = தாம் உயிராக விரும்பும் காதலரின் இனிய நினைவுகளை நெஞ்சில் எண்ணிக் கொண்டிருக்கும் போது,• வருவதொன்று இல் = பிரிவால் வரக்கூடிய எந்தவொரு பெருந்துன்பமும் நம்மை அண்டுவதில்லை;• காமம் எனைத்து ஒன்று இனிதே காண் = அதனால் காதல் என்பது எந்த வகையிலும் அளவிட முடியாத பேரினிமை கொண்டதே ஆகும்!
மு.வரதராசன்
தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும்.
பரிமேலழகர்
(இதுவும் அது.) தாம் வீழ்வார் நினைப்ப வருவது ஒன்று இல் - தம்மால் விரும்பப் படுவாரைப் பிரிவின்கண் நினைத்தால் அந்நினைவார்க்கு அப்பிரிவின் வருவதோர் துன்பம் இல்லையாம்; காமம் எனைத்து இனிது ஒன்றே காண் - அதனால் காமம் எத்துணையேனும் இனிதொன்றே காண். (புணர்ந்துழியும் பிரிந்துழியும் ஒப்ப இனிது என்பான், 'எனைத்தும் இனிது' என்றான். சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தான் ஆற்றிய வகை கூறியவாறு.)
சாலமன் பாப்பையா
நாம் விரும்புபவரைப் பிரிவிலும் நினைத்தால் பிரிவுத் துன்பம் வராது. அதனால் என்ன ஆனாலும் சரி, காதல் இனியதுதான்.
Meaning in English
How great is love! Behold its sweetness past belief! Think on the lover, and the spirit knows no grief





