தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்எம்நெஞ்சத்து ஓவா வரல்.
tamnenjsat temmaik kaTikoNTAr nANArkolemnenjsat tOvA varal
Lakshmi Viswanathan
பொருள் / உரை
முருகா எளிய உரை
தம்முடைய நெஞ்சில் என்னை நினையாமல் காவல் வைத்து விலக்கிவிட்ட என் காதலர், என் நெஞ்சில் மட்டும் ஒரு நொடியும் ஓயாமல் வந்து காட்சி தருவதற்குச் சிறிதும் வெட்கப்பட மாட்டாரோ?
• தம் நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் = தம்முடைய நெஞ்சில் என்னை நினையாமல் காவல் வைத்து விலக்கிவிட்ட என் காதலர்;• எம் நெஞ்சத்து ஓவா வரல் = என் நெஞ்சில் மட்டும் ஓயாமல் வந்து நிற்பதற்கு,• நாணார்கொல் = சிறிதும் வெட்கப்பட மாட்டாரோ?
மு.வரதராசன்
தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வரவதைப் பற்றி நாணமாட்டாரோ?
பரிமேலழகர்
(இதுவும் அது.) தம் நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் - தம்முடைய நெஞ்சின்கண்ணே யாம் செல்லாமல் எம்மைக் காவல் கொண்ட காதலர்; எம் நெஞ்சத்து ஓவா வரல் நாணார்கொல் - தாம் எம்முடைய நெஞ்சின்கண் ஒழியாது வருதலை நாணார்கொல்லோ? (ஒருவரைத் தம்கண் வருதற்கு ஒருகாலும் உடம்படாது, தாம் அவர்கண் பலகாலுஞ்சேறல் நாணுடையார் செயலன்மையின், 'நாணார்கொல்' என்றாள்.)
சாலமன் பாப்பையா
தம் நெஞ்சத்தில் என்னை விலக்கிவிட்ட அவர், என் நெஞ்சத்தில் மட்டும் ஓயாமல் வருவதற்கு வெட்கப் படமாட்டாரோ?
Meaning in English
Me from his heart he jealously excludes: Hath he no shame who ceaseless on my heart intrudes





