வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்துவாழ்வாரின் வன்கணார் இல்.
vIzhvArin insol peRAa tulakattuvAzhvArin vankaNAr il
Meera Sridhar
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• வீழ்வாரின் = தாம் உயிராக விரும்பும் காதலரிடமிருந்து,• இன்சொல் பெறாஅது = ஓர் இனிய ஆறுதல் சொல்லைக் கூடத் தூது வழியாகப் பெறாமல்;• உலகத்து வாழ்வாரின் = உலகத்தில் இன்னும் உயிரோடு வாழ்கின்ற எங்களைப் போன்ற பெண்களைப் போல,• வன்கணார் இல் = கல்நெஞ்சம் கொண்ட கொடியவர்கள் வேறு எவரும் இல்லை!எளிய விளக்கம்:தாம் உயிராக விரும்பும் காதலரிடமிருந்து ஓர் இனிய ஆறுதல் சொல்லைக் கூடப் பெறாமல், இந்த உலகில் இன்னும் உயிரைத் தாங்கிக் கொண்டு வாழ்கின்ற எங்களைப் போன்ற பெண்களைப் போலக் கல்நெஞ்சம் கொண்டவர்கள் வேறு எவரும் இல்லை!
மு.வரதராசன்
தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் ( பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப் போல் வன்கண்மை உடையவர் இல்லை.
பரிமேலழகர்
(தலைமகன் தூது வரக்காணாது சொல்லியது.) வீழ்வாரின் இன்சொல் பெறாது வாழ்வாரின் - தம்மால் விரும்பப்படும் காதலர் திறத்துநின்றும்ஓர் இன்சொல்லளவும் பெறாதே பிரிவாற்றி உயிர் வாழ்கின்ற மகளிர் போல; வன்கணார் உலகத்து இல் - வன்கண்மையுடையார் இவ்வுலகத்து இல்லை. ('காதலர்திறத்துச் சொல் யாதானும் எனக்கு இனிது', என்னும் கருத்தால் 'இன்சொல்' என்றாள். இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. யான் வன்கண்ணேனாகலின் அதுவும் பெறாது உயிர் வாழாநின்றேன் என்பதாம்.)
சாலமன் பாப்பையா
தம்மால் விரும்பப்படும் கணவனிடமிருந்து ஓர் இன்சொல் கூடப் பெறாமல் உயிர் வாழும் மனைவியைப் போன்ற கொடியவர் இவ்வுலகத்தில் வேறு இல்லை.
Meaning in English
Who hear from lover's lips no pleasant word from day to day, Yet in the world live out their life,- no braver souls than they





