Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1196

இன்பத்துப்பால்கற்பியல்120. தனிப்படர்மிகுதி

ஒருதலையான் இன்னாது காமம்காப் போலஇருதலை யானும் இனிது.

orutalaiyAn innAtu kAmangkAp pOlairutalai yAnum initu

Abirami Ramachandran

பொருள் / உரை

முருகா எளிய உரை

காதல் என்பது இருவரில் ஒரு பக்கத்தில் மட்டுமே தனித்து இருப்பது பெருந்துன்பத்தைத் தருவதாகும்; காவடித் தண்டின் இரு பக்கச் சுமைகளும் சமமாக இருப்பதைப் போல, காதலர்கள் இருவரிடத்திலும் சமமாகப் பொங்குவதே இனிமையானதாகும்!

• காமம் ஒருதலையான் இன்னாது = காதல் என்பது இருவரில் ஒரு பக்கத்தில் மட்டுமே இருப்பது துன்பத்தைத் தருவதாகும்;• காப் போல = காவடித்தண்டின் இரு பக்கச் சுமைகளும் சமமாக இருப்பதைப் போல,• இருதலையானும் இனிது = காதலன் காதலி ஆகிய இருவரிடத்திலும் சமமாக அமைவதே இன்பம் தருவதாகும்!

மு.வரதராசன்

காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.

பரிமேலழகர்

(இதுவும் அது.) காமம் ஒரு தலையான் இன்னாது - மகளிர் ஆடவர் என்னும் இரு தலையினும் வேட்கை ஒருதலைக்கண்ணேயாயின், அஃது இன்னாது; காப்போல இருதலையானும் இனிது - காவினது பாரம்போல இருதலைக்கண்ணும் ஒப்பின் அஃது இனிது.(மூன்றன் உருபுகள் ஏழன் பொருண்மைக் கண் வந்தன. கா -ஆகுபெயர். 'என்மாட்டு உண்டாய வேட்கை அவர் மாட்டும்உண்டாயின், யான் இவ்வாறு துன்பமுழத்தல் கூடுமோ'?என்பதாம்.)

சாலமன் பாப்பையா

ஆண், பெண் என்னும் இரு பக்கத்தில் ஒரு பக்கம் மட்டுமே காதல் இருந்தால் அது கொடுமை காவடியின் பாரத்தைப் போல இருபக்கமும் இருந்தால்தான் இனிது.

Meaning in English

Love on one side is bad; like balanced load By porter borne, love on both sides is good

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout