நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோதாம்காதல் கொள்ளாக் கடை.
nAmkAtal koNTAr namakkevan seypavOtAmkAtal koLLAk kaTai
Janaki Iyer
பொருள் / உரை
முருகா எளிய உரை
நாம் முழு நெஞ்சோடு விரும்பி அன்பு செலுத்திய காதலர், தாமும் அதேபோல நம்மிடம் அன்பு பாராட்டாத போது, வெறும் ஒருதலைக் காதலால் நமக்கு என்ன இன்பமும் ஆறுதலும் கிடைத்துவிடப் போகிறது?
• நாம் காதல் கொண்டார் = நாம் முழு நெஞ்சோடு விரும்பி அன்பு செய்த காதலர்,• தாம் காதல் கொள்ளாக் கடை = தாமும் அவ்வாறே நம்மிடம் அன்பு பாராட்டாத போது;• நமக்கு எவன் செய்பவோ = அவரால் நமக்கு என்ன இன்பமும் நன்மையும் கிடைத்துவிடப் போகிறது?
மு.வரதராசன்
நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல் கொள்ளாதபோது, நமக்கு அவர் என்ன நன்மை செய்வார்?
பரிமேலழகர்
('அவர்மேற் காதலுடைமையின் அவர் கருத்தறிந்து ஆற்றினாய்', என்ற தோழிக்குச் சொல்லியது.) நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்ப - நம்மால் காதல் செய்யப்பட்டவர் நமக்கு என்ன இன்பத்தைச் செய்வர்; தாம் காதல் கொள்ளாக்கடை - அவ்வாறே தாமும் நம்கண் காதல் செய்யாவழி. (எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'அக்காதல் உடைமையால் நாம் பெற்றது துன்பமே' என்பதாம்.)
சாலமன் பாப்பையா
நாம் காதலித்தவர் நம்மைக் காதலிக்கவில்லை என்றால் நமக்கு எத்தகைய மகிழ்ச்சியைத் தருவார்?
Meaning in English
From him I love to me what gain can be, Unless, as I love him, he loveth me





