Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1194

இன்பத்துப்பால்கற்பியல்120. தனிப்படர்மிகுதி

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்வீழப் படாஅர் எனின்.

vIzhap paTuvAr kezhIiyilar tAmvIzhvArvIzhap paTAar enin

Sahithya Gajamugan

பொருள் / உரை

முருகா எளிய உரை

தாம் விரும்புகின்ற காதலனால் தாமும் அவ்வாறே அன்பு செய்யப்பட்டு விரும்பப்படாத நிலையில் ஒரு பெண் இருப்பாளானால், அவள் உலகத்து மற்ற மனிதர்களால் எத்துணை போற்றப்பட்டாலும் நல்வினைப் பேறு இல்லாத துரதிஷ்டசாலியே ஆவாள்!

• தாம் வீழ்வார் = தாம் விரும்புகின்ற காதலனால்,• வீழப் படாஅர் எனின் = தாமும் அவ்வாறே விரும்பப்படாத நிலையில் இருப்பாராயின்;• வீழப் படுவார் = மற்ற உலகத்து மனிதர்களால் எத்துணை போற்றப்பட்டு விரும்பப்படுபவராயினும்,• கெழீஇயிலர் = அவர் நல்வினை இல்லாத துரதிஷ்டசாலிகளே ஆவர்!

மு.வரதராசன்

தாம் விரும்பும் காதலரால் விரும்பப்படாவிட்டால் உலகத்தாரால் விரும்பப்படும் நிலையில் உள்ளவரும் நல்வினை பொருந்தியவர் அல்லர்.

பரிமேலழகர்

('காதலரை இயற்பழித்தலை அஞ்சி அவரருளின்மை மறைத்த நீ கடவுட் கற்பினையாகலின், கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுதி', என்ற தோழிக்குச் சொல்லியது.) வீழப்படுவார் - கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுவாரும்; தாம் வீழ்வார் வீழப்படார் எனின் கெழீஇயிலர் - தாம் விரும்பும் கணவரான் விரும்பப் படாராயின் தீவினையாட்டியர்.(சிறப்பு உம்மை, விகாரத்தால் தொக்கது. கெழீஇயின்மை: நல்வினையின்மை; அஃது அருத்தாபத்தியால் தீவினையுடைமையாயிற்று. 'தீவினையுடையோற்கு அந்நன்கு மதிப்பால் பயனில்லை', என்பதாம்.)

சாலமன் பாப்பையா

தாம் விரும்பும் கணவனால் விரும்பப்படாதவளாக மனைவி இருந்துவிடுவாளானால், அவள் தீவினை வசப்பட்டவளே.

Meaning in English

Those well-beloved will luckless prove, Unless beloved by those they love

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout