வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமேவாழுநம் என்னும் செருக்கு.
vIzhunar vIzhap paTuvArk kamaiyumEvAzhunam ennum serukku
Dr. Divya Narayanan
பொருள் / உரை
முருகா எளிய உரை
தாம் விரும்பும் காதலனால் தானும் அதேபோல மனதார விரும்பப்படும் பெண்ணுக்கே, 'காதலர் பிரிந்திருந்தாலும் விரைந்து வந்து நம்மைச் சேர்வார்; நாம் அவருடன் இன்புற்று வாழ்வோம்' என்ற நன்னம்பிக்கையும் பெருமிதமும் உரியதாகும்!
• வீழுநர் வீழப் படுவார்க்கு = தாம் விரும்பும் காதலனால் தானும் முழுமையாக விரும்பப்படும் பெண்ணுக்கே;• வாழுநம் என்னும் செருக்கு அமையுமே = 'காதலர் பிரிந்தாலும் விரைந்து வந்து நம்மை ஆட்கொள்வார், நாம் அவருடன் இன்புற்று வாழ்வோம்' என்ற பெருமிதமும் நம்பிக்கையும் உரியதாகும்!
மு.வரதராசன்
காதலரால் விரும்பப்படுகின்றவர்க்கும் ( பிரிவுத் துன்பம் இருந்தாலும்) மீண்டும் வந்தபின் வாழ்வோம் என்று இருக்கும் செருக்குத் தகும்.
பரிமேலழகர்
(இதுவும் அது.) வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே - தாம் விழையும் கணவரான் விழையப்படும் மகளிர்க்கு ஏற்புடைத்து ; வாழுநம் என்னும் செருக்கு - காதலர் பிரிந்தாராயினும் நம்மை நினைந்து கடிதின் வருவர்; வந்தால் நாம் இன்புற்று வாழ்தும் என்றிருக்கும் தருக்கு. ('நாம் அவரான் வீழப்படாமையின், நமக்கு அமைவது இறந்துபாடு' என்பதாம்.)
சாலமன் பாப்பையா
தாம் விரும்பும் கணவனால் விரும்பப்பட்ட பெண்ணுக்கே (எப்படியும் விரைவில் அவர் வருவார் என்ற உறுதியினால்) வாழ்வோம் என்னும் செருக்கு, பொருத்தமாக இருக்கும்.
Meaning in English
Who love and are beloved to them alone Belongs the boast, 'We've made life's very joys our own.'





