Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1192

இன்பத்துப்பால்கற்பியல்120. தனிப்படர்மிகுதி

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்குவீழ்வார் அளிக்கும் அளி.

vAzhvArkku vAnam payantaRRAl vIzhvArkkuvIzhvAr aLikkum aLi

Jayasree Kumar

பொருள் / உரை

முருகா எளிய உரை

தம்மை உயிராக விரும்பும் காதலிக்கு, அவளன்றி வாழ முடியாத காதலன் உரிய பருவத்தில் வந்து காட்டும் பேரன்பானது, உலகில் உயிர் வாழும் மக்களுக்கு வானத்து மேகங்கள் தக்க காலத்தில் மழையைப் பொழிந்து காப்பதைப் போன்றதாகும்!

• வீழ்வார்க்கு = தம்மை உயிராக விரும்பும் காதலிக்கு,• வீழ்வார் அளிக்கும் அளி = அவளன்றி வாழ முடியாத காதலன் உரிய காலத்தில் வந்து செய்யும் பேரன்பானது;• வாழ்வார்க்கு = உலகத்தில் உயிர் வாழும் மக்களுக்கு,• வானம் பயந்தற்று = மேகம் தக்க பருவத்தில் மழையைப் பொழிந்து காப்பதைப் போன்றதாகும்!

மு.வரதராசன்

தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர் வாழ்கினறவர்க்கு மேகம் மழை பெய்து காப்பாற்றுதலைப் போன்றது.

பரிமேலழகர்

(இதுவும் அது.) வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி - அறமும் பொருளும் நோக்கிப் பிரிந்தால், தம்மை இன்றியமையா மகளிர்க்கு அவரை இன்றியமையாக் கணவர் அளவறிந்து வந்து செய்யும் தலையளி; வாழ்வார்க்கு வானம் பயந்தற்று - தன்னையே நோக்கி உயிர் வாழ்வார்க்கு வானம் அளவறிந்து பெய்தாற் போலும். ('நம் காதலர் நம்மை விழையாமையின், அத்தலையளி இல்லையாகலான், மழை வறந்துழி அதனான் வாழ்வார் போல இறந்து படுதலே நமக்கு உள்ளது' என்பதாம்.)

சாலமன் பாப்பையா

அவர் இன்றி வாழ முடியாத மனைவிக்கு, அவள் இன்றி அமையாத கணவர் காட்டும் அன்பு, தன்னை நோக்கி உயிர்வாழும் உலகத்தவர்க்கு வானம் உரிய நேரம் மழை தந்தது போலாம்.

Meaning in English

As heaven on living men showers blessings from above, Is tender grace by lovers shown to those they love

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout