Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1191

இன்பத்துப்பால்கற்பியல்120. தனிப்படர்மிகுதி

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரேகாமத்துக் காழில் கனி.

tAmvIzhvAr tamvIzhap peRRavar peRRArEkAmattuk kAzhil kani

திருக்குறள் / THIRUKKURAL

பொருள் / உரை

முருகா எளிய உரை

தாம் விரும்பும் காதலரால் தாமும் அதேபோல விரும்பிப் போற்றப்படும் நல்ல பேற்றினைப் பெற்ற பெண்கள், காதல் வாழ்க்கையின் பயனாகிய கொட்டையோ கடினமான விதையோ இல்லாத தித்திக்கும் கனியைப் பெற்றவர் ஆவார்கள்!

• தாம் வீழ்வார் = தாம் விரும்பும் காதலரால்,• தம் வீழப் பெற்றவர் = தாமும் அதேபோலத் திரும்ப விரும்பப்படும் பேற்றினைப் பெற்ற பெண்கள்;• காமத்துக் காழ் இல் கனி = காதல் இன்பம் என்னும் கொட்டையோ விதையோ இல்லாத சுவையான பழத்தைப்,• பெற்றாரே = முழுமையாகப் பெற்றவர் ஆவார்கள்!

மு.வரதராசன்

தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவார்.

பரிமேலழகர்

('காதலரும் நின்னினும் ஆற்றாராய்க் கடிதின் வருவர், நீ அவரோடு பேரின்பம் நுகர்தி', என்ற தோழிக்குச் சொல்லியது.) தாம் வீழ்வார் தம் வீழப் பெற்றவர் - தம்மாற் காதலிக்கப்படும் கணவர் தம்மைக் காதலிக்கப்பெற்ற மகளிர்; பெற்றாரே காமத்துக் காழ்இல் கனி - பெற்றாரன்றே காம நுகர்ச்சி என்னும் பரல் இல்லாத கனியை. (காமம்: ஆகுபெயர். 'அத்து' அல்வழிக்கண் வந்தது. முன்னை நல்வினை இல்வழிப் பெறப்படாமையின் 'பெற்றார்' என்றும், அவரால் தடையின்றி நுகரப்படுதலின் 'காழில் கனி' என்றும் கூறினாள். 'நம் காதலர் பிரிதலேயன்றிப் பின் வாராமையும் உடைமையின் அக்கனி யாம் பெற்றிலேம்' என்பதாயிற்று.)

சாலமன் பாப்பையா

தாம் விரும்புபவராலேயே விரும்பப்பட்ட பெண்கள்தாம் காதல் இன்பம் என்னும் விதை இல்லாத கனியைப் பெற்றவர் ஆவர்.

Meaning in English

The bliss to be beloved by those they love who gains, Of love the stoneless, luscious fruit obtains

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout