பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்நன்னிலையர் ஆவர் எனின்.
pasakkamaR paTTAngken mEni nayappittArnannilaiyar Avar enin
Preetha Venkatesh
பொருள் / உரை
முருகா எளிய உரை
அன்று என்னைச் சம்மதிக்க வைத்துப் பிரிந்து சென்ற என் காதலர் தாம் சென்ற இடத்தில் பழிச்சொல் ஏதுமின்றி நலமாக இருப்பார் என்றால், என் மேனி எப்படிப்பட்ட பசலை நிறம் கொண்டு வாடிப் போனாலும் போகட்டும்!
• நயப்பித்தார் = அன்று என்னைச் சம்மதிக்க வைத்துப் பிரிந்து சென்ற காதலர்,• நன்னிலையர் ஆவர் எனின் = தாம் சென்ற இடத்தில் நன்மைகளோடு நலமாக இருப்பார் என்றால்;• என் மேனி பட்டாங்கு பசக்க = என் மேனி எவ்வளவாகப் பசலை நிறம் அடைந்து வாடினாலும் வாடிப் போகட்டும்!
மு.வரதராசன்
பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையுடையவர் ஆவார் என்றால், என்னுடைய மேனி உள்ளபடி பசலை நிறம் அடைவதாக.
பரிமேலழகர்
(இதுவும் அது.) நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின் - இப்பிரிவை யானே உடம்படும் வகை சொல்லியவர் இன்று நின் கருத்தான் நல்ல நிலையினர் ஆவாராயின்; என் மேனி பட்டாங்கு பசக்க - என் மேனி பட்டதுபடப் பசப்பதாக. (நன்னிலையராதல் - நன்மைக்கண்ணே நிற்றலை உடையராதல். 'பட்டாங்காக' என ஆக்கம் விரித்து உரைக்க. 'முன் இப்பிரிவின் கொடுமையறியாத என்னை இதற்கு உடம்படுத்திப் பிரிந்தவர் தவறிலராகவே வேண்டுவது, என் மேனியும் பசப்பும் யாது செய்யின் என்'? என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது.)
சாலமன் பாப்பையா
இந்தப் பிரிவிற்கு நான் சம்மதிக்கும்படி செய்து பிரிந்தவர்தாம் நல்லவர் என்றால், என் மேனி மேலும் பசலை அடைந்து விட்டுப் போகட்டும்!
Meaning in English
Well let my frame, as now, be sicklied o'er with pain, If he who won my heart's consent, in good estate remain





