Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1187

இன்பத்துப்பால்கற்பியல்119. பசப்புறுபருவரல்

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்அள்ளிக்கொள் வற்றே பசப்பு.

pullik kiTantEn puTaipeyarntEn avvaLavilaLLikkoL vaRRE pasappu

Lavanya Sampath

பொருள் / உரை

முருகா எளிய உரை

முன்பு ஒரு முறை நான் காதலரை இறுகத் தழுவிப் படுத்திருந்தேன்; பிறகு ஒரு கணம் சற்றுப் பக்கத்தில் விலகினேன்; அவ்வளவுதான், அந்தச் சிறிய இடைவெளியிலேயே இந்தப் பசலை நிறமானது என் மேனியை அப்படியே வாரி அள்ளிக் கொள்வது போலப் படர்ந்து விட்டதே!

• புல்லிக் கிடந்தேன் = அன்று காதலரை இறுகத் தழுவிப் படுத்திருந்தேன்;• புடை பெயர்ந்தேன் = அவ்வணைப்பிலிருந்து ஒரு கணம் சற்றுப் பக்கத்தில் விலகினேன்;• அவ்வளவில் = அவ்வளவுதான், அந்தச் சிறிய இடைவெளியிலேயே,• பசப்பு அள்ளிக் கொள்வற்று = இந்தப் பசலை நிறமானது என் மேனியைத் தன் கைகளால் வாரி அள்ளிக் கொள்வது போலப் படர்ந்து விட்டதே!

மு.வரதராசன்

தலைவனைத் தழுவிக் கிடந்தேன்; பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை நிறம் அள்ளிக் கொள்வதுபோல் வந்து பரவி விட்டதே!

பரிமேலழகர்

(காதலர் பிரிந்து அணித்தாயிருக்கவும் ஆற்றுகின்றிலை என்ற தோழிக்கு முன் நிகழ்ந்தது கூறியது.) எம் காதலர் உவக்காண் செல்வார் - பண்டும் நம் காதலர் உங்கே செல்வாராக; என் மேனி பசப்பு ஊர்வது இவக்காண- என் மேனி பசப்பூர்வது இங்கேயன்றோ? அப்பெற்றியது இன்று பிறிதொன்றாமோ? ('உவக்காண்', 'இவக்காண்' என்பன ஒட்டி நின்ற இடைச்சொற்கள், தேய அண்மையாற் கால அண்மை கருதப்பட்டது. 'அவர் செலவும் பசப்பினது வரவும் பகல் இரவுகளின் செலவும் வரவும் போல்வது அறிந்து வைத்து அறியாதாய்போல நீ சொல்லுகின்றது என்ன'? என்பதாம்.)

சாலமன் பாப்பையா

முன்னொரு சமயம் நான் அவரைத் தழுவிக் கிடந்தேன்; கொஞ்சம் விலகினேன்; அவ்வளவுதான்; இந்தப் பசலை என்னை அப்படியே அள்ளிக் கொள்வது போல் வந்துவிட்டது.

Meaning in English

I lay in his embrace, I turned unwittingly; Forthwith this hue, as you might grasp it, came on me

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout