Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1185

இன்பத்துப்பால்கற்பியல்119. பசப்புறுபருவரல்

உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்மேனி பசப்பூர் வது.

uvakkANem kAtalar selvAr ivakkANenmEni pasappUr vatu

Anuradha Ananth

பொருள் / உரை

முருகா எளிய உரை

அதோ பாருங்கள்! என் காதலர் என்னை விட்டுப் பிரிந்து இன்னும் சில அடிகளே சென்று கொண்டிருக்கிறார்; ஆனால் இதோ பாருங்கள், அதற்குள்ளாக என் மேனி எங்கும் பசலை நிறம் உடனே வந்து படர்ந்து விடுகிறது!

• எம் காதலர் உவக்காண் செல்வார் = அதோ பாருங்கள்! என் காதலர் என்னை விட்டுப் பிரிந்து அந்தப் பக்கமாகச் செல்கிறார்;• என் மேனி பசப்பு ஊர்வது இவக்காண் = இதோ பாருங்கள்! அதற்குள்ளாக இந்தப் பக்கத்தில் என் மேனி முழுவதும் பசலை நிறம் பரவி விடுகிறது!

மு.வரதராசன்

அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ பார்! என்னுடைய மேனியில் பசலை நிறம் வந்து படர்கிறது.

பரிமேலழகர்

(காதலர் பிரிந்து அணித்தாயிருக்கவும் ஆற்றுகின்றிலை என்ற தோழிக்கு முன் நிகழ்ந்தது கூறியது.) எம் காதலர் உவக்காண் செல்வார் - பண்டும் நம் காதலர் உங்கே செல்வாராக; என் மேனி பசப்பு ஊர்வது இவக்காண- என் மேனி பசப்பூர்வது இங்கேயன்றோ? அப்பெற்றியது இன்று பிறிதொன்றாமோ? ('உவக்காண்', 'இவக்காண்' என்பன ஒட்டி நின்ற இடைச்சொற்கள், தேய அண்மையாற் கால அண்மை கருதப்பட்டது. 'அவர் செலவும் பசப்பினது வரவும் பகல் இரவுகளின் செலவும் வரவும் போல்வது அறிந்து வைத்து அறியாதாய்போல நீ சொல்லுகின்றது என்ன'? என்பதாம்.)

சாலமன் பாப்பையா

முன்பும்கூட, அந்தப் பக்கம் என் அன்பர் போயிருப்பார்; இந்தப் பக்கம் என் மேனி பசலை கொண்டு விடும். முன்பே அப்படி என்றால் இப்போது எப்படி இருக்கும்?

Meaning in English

My lover there went forth to roam; This pallor of my frame usurps his place at home

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout