Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1184

இன்பத்துப்பால்கற்பியல்119. பசப்புறுபருவரல்

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்கள்ளம் பிறவோ பசப்பு.

uLLuvan manyAn uraippa tavartiRamAlkaLLam piRavO pasappu

VY THA RA MOORTHI வை தா ர மூர்த்தி

பொருள் / உரை

முருகா எளிய உரை

நான் மனதால் எப்போதும் நினைப்பது காதலரின் நினைவையே; வாயால் பேசுவதும் அவரது நற்குணங்களையே; அவ்வாறிருக்கவும், என் மெய்யில் வந்து படர்ந்த இந்தப் பசலை நிறமானது எனக்குத் தெரியாமல் செய்த வஞ்சனையோ? அல்லது வேறு எதன் காரணமோ?

• யான் உள்ளுவன் = நான் மனத்தினால் சதா எண்ணுவது காதலரின் நினைவையே;• உரைப்பது அவர் திறம் = வாயினால் பேசுவதும் அவருடைய நல்ல பண்புகளையே;• பசப்பு கள்ளம் பிறவோ = அவ்வாறிருக்கவும், என் மேனியில் வந்து குடியேறிய இந்தப் பசலை நிறமானது என் உள்ளத்திற்கு வஞ்சனை செய்து வந்ததோ? வேறு எவ்வாறு வந்தது?

மு.வரதராசன்

யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ?

பரிமேலழகர்

('பிரிகின்றவர் தெளிவித்த சொற்களையும் அவர் நல்திறங்களையும் அறிதியாகலின் நீட்டியாது வருவர்', என்ற வழிச் சொல்லியது.) யான் உள்ளுவன் - அவர் சொற்களை யான் மனத்தால் நினையா நிற்பேன்; உரைப்பது அவர் திறம் - வாக்கால் உரைப்பதும் அவர் நல்திறங்களையே; பசப்புக் கள்ளம் - அங்ஙனம் செய்யாநிற்கவும், பசப்பு வந்து நின்றது, இது வஞ்சனையாயிருந்தது. (பிறவும், ஓவும் அசைநிலை. மெய் மற்றை மனவாக்குகளின் வழித்தாகலின், அதன் கண்ணும் வரற்பாற்றன்றாயிருக்க வந்தமையின், இதன் செயல் கள்ளமாயிருந்தது எனத் தான் ஆற்றுகின்றமை கூறியவாறாயிற்று.)

சாலமன் பாப்பையா

நான் நினைப்பதெல்லாம் அவரைத்தான். சொல்வது எல்லாம் அவர் குணங்களைத்தாம்; இருந்தும் இந்தப் பசலை வந்துவிட்டதே; இது வஞ்சகம் அல்லவா?

Meaning in English

I meditate his words, his worth is theme of all I say, This sickly hue is false that would my trust betray

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout