Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1180

இன்பத்துப்பால்கற்பியல்118. கண்விதுப்பழிதல்

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்அறைபறை கண்ணார் அகத்து.

maRaipeRal UrAhk karitanRAl empOlaRaipaRai kaNNAr akattu

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

அடிக்கப்படும் முரசு அல்லது பறையைப் போல நெஞ்சில் உள்ள இரகசியங்களைத் தாமே அழுது பறைசாற்றிவிடும் கண்களைக் கொண்ட எங்களைப் போன்ற பெண்களின் உள்ளக் கருத்தை அறிந்துகொள்வது, இந்த ஊரார்க்கு மிகவும் எளிதான ஒன்றாகும்!

• எம் போல் அறைபறை கண்ணார் அகத்து = எங்களைப் போல உள்ளத்தில் உள்ளதை அடித்துப் பறைசாற்றும் கண்களை உடைய பெண்களின் நெஞ்சத்து இரகசியத்தை;• மறை பெறல் = அறிந்து கொள்வது என்பது,• ஊரார்க்கு அரிது அன்று = இந்த ஊர் மக்களுக்கு மிகவும் எளிதான காரியமாகும்!

மு.வரதராசன்

அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று.

பரிமேலழகர்

('காதலரை இவ்வூர் இயற்பழியாமல் அவர் கொடுமையை மறைக்க வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது) எம் போல் அறைபறை கண்ணார் அகத்து மறை பெறல் - எம்மைப் போலும் அறைபறையாகிய கண்ணிணையுடையார் தம் நெஞ்சின்கண் அடக்கிய மறையையறிதல்; ஊரார்க்கு அரிதன்று - இவ்வூரின்கண் உள்ளார்க்கு எளிது.'('மறை' என்றது ஈண்டு மறைக்கப்படுவதனை. அகத்து நிகழ்வதனைப் புறத்துள்ளார்க்குஅறிவித்தலாகிய தொழிலாம் ஒற்றுமை உண்மையின் 'அறைபறையாகிய கண்' என்றாள். இங்ஙனம் செய்யுள் விகாரமாக்காது, 'அறைபறைக் கண்ணார்'என்று பாடம் ஓதுவாரும் உளர். 'யான் மறைக்கவும் இவை வெளிப்படுத்தா நின்றன' என்பதாம்.)

சாலமன் பாப்பையா

அடிக்கப்படும் பறைபோன்று மனத்துள் இருப்பதை அழுது வெளியே காட்டிவிடும் எம்போன்ற பெண்களின் ரகசியத்தை அறிந்து கொள்வது இவ்வூரில் இருப்பவர்க்கு எளிது.

Meaning in English

It is not hard for all the town the knowledge to obtain, When eyes, as mine, like beaten tambours, make the mystery plain

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout