Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1177

இன்பத்துப்பால்கற்பியல்118. கண்விதுப்பழிதல்

உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்துவேண்டி அவர்க்கண்ட கண்.

uzhantuzhan tuLnIr aRuka vizhaintizhaintuvENTi avarkkaNTa kaN

Archana Manikandan

பொருள் / உரை

முருகா எளிய உரை

அன்று பேரன்போடு உள்ளம் உருகிக் காதலரை ஆசையுடன் பார்த்த அந்தக் கண்கள், இன்று அவர் பிரிவைத் தாங்காது தூக்கமின்றித் தவித்துத் தவித்து, தம் உள்ளே இருக்கும் கண்ணீர் அனைத்தும் முழுமையாக வற்றிப் போகட்டும்!

• விழைந்து இழைந்து வேண்டி அவர்க்கண்ட கண் = அன்று பேரார்வத்தோடு உள்ளம் உருகிக் காதலரைக் கண்ட கண்கள்;• உழந்து உழந்து = இன்று அவர் பிரிவால் இரவில் தூங்காமல் வருந்தி வருந்தி,• உள்நீர் அறுக = தம்முள்ளே சுரக்கும் கண்ணீர் அனைத்தும் முற்றிலுமாக வற்றிப் போகட்டும்!

மு.வரதராசன்

அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்.

பரிமேலழகர்

(இதுவும் அது) விழைந்து இழைந்து வேண்டி அவர்க் கண்ட கண் - விழைந்து உள்நெகிழ்ந்து விடாதே அன்று அவரைக் கண்ட கண்கள்; உழந்துழந்து உள்நீர் அறுக-இன்று இத்துயிலாது அழுங்கலாய துன்பத்தினை உழந்து தம் அகத்துள்ள நீர் அற்றே போக. (அடுக்கு இடைவிடாமைக்கண் வந்தது. அறுதலாகிய இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் நின்றது)

சாலமன் பாப்பையா

விரும்பி மகிழ்ந்து விடாமல் அன்று அவரைக் கண்ட கண்களின் உள் இருக்கும் கண்ணீர் எல்லாம் இன்று வருந்தி வருந்தி வற்றிப் போகட்டும்!

Meaning in English

Aching, aching, let those exhaust their stream, That melting, melting, that day gazed on him

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout