Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1176

இன்பத்துப்பால்கற்பியல்118. கண்விதுப்பழிதல்

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்தாஅம் இதற்பட் டது.

Oo initE emakkin nOy seytakaNtAam itaRpaT Tatu

Daisy Yensone

பொருள் / உரை

முருகா எளிய உரை

எனக்கு இந்தத் தீராத காதல் துன்பத்தை உண்டாக்கித் தந்த என் கண்கள், தாமும் இரவில் உறங்க முடியாமல் அழுது தவித்துத் துன்புறுவதைப் பார்ப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது!

• எமக்கு இந்நோய் செய்த கண் = எனக்கு இந்தத் தீராத காதல் துன்பத்தை உண்டாக்கிய என் கண்கள்;• தாஅம் இதற்பட்டது = தாமும் உறங்காமல் இங்ஙனம் கண்ணீர்ச் சுழலில் விழுந்து தவிப்பது,• ஓஒ இனிதே = ஓகோ! எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் நன்றாகவும் இருக்கிறது!

மு.வரதராசன்

எமக்கு இந்தக் காமநோயைஉண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் நல்லதே!

பரிமேலழகர்

(இதுவும் அது.) எமக்கு இந்நோய் செய்த கண் தாம் இதன் பட்டது- எமக்கு அக் காமநோயினைச் செய்த கண்கள் தாமும் இத்துயிலாது அழுதற் கண்ணே பட்டது; ஓஒ இனிதே - மிகவும் இனிதாயிற்று. ('ஓ' என்பது மிகுதிப் பொருட்கண் வந்த குறிப்புச்சொல். 'தம்மால் வருத்தமுற்ற எமக்கு அது தீர்ந்தாற்போன்றது' என்பதாம்)

சாலமன் பாப்பையா

எனக்கு இந்தக் காதல் துன்பத்தைத் தந்த கண்கள் தாமும் தூங்காமல் அழுவது நன்றாகத்தான் இருக்கிறது.

Meaning in English

Oho! how sweet a thing to see! the eye That wrought this pain, in the same gulf doth lie

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout