Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1175

இன்பத்துப்பால்கற்பியல்118. கண்விதுப்பழிதல்

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்காமநோய் செய்தஎன் கண்.

paTalARRA paital uzhakkum kaTalARRakkAmanOy seytaven kaN

VY THA RA MOORTHI வை தா ர மூர்த்தி

பொருள் / உரை

முருகா எளிய உரை

பெருங்கடலாலும் தாங்க முடியாத அளப்பரிய காதல் பெருந்துன்பத்தை எனக்கு உண்டாக்கிய என் கண்களானது, தாமும் இரவில் தூங்க முடியாமல் கண்ணீர்ப் பெருந்துயரில் விழுந்து தவிக்கின்றன!

• கடல் ஆற்றாக் காமநோய் செய்த என்கண் = கடலும் தாங்க முடியாத அளவுக்குப் பெருந்துன்பத்தைத் தரும் காதல் நோயை எனக்கு உண்டாக்கிய என் கண்கள்;• படல் ஆற்றா = தாமும் இரவில் துயில முடியாமல்,• பைதல் உழக்கும் = கண்ணீர் சிந்தும் பெருந்துன்பத்தில் விழுந்து வருந்துகின்றன!

மு.வரதராசன்

அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என் கண்கள், இன்று உறங்க முடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன.

பரிமேலழகர்

(இதுவும் அது) கடல் ஆற்றா காமநோய் செய்த என்கண்- எனக்குக் கடலும் சிறிதாம் வண்ணம் பெரியதாய காம நோயைச் செய்த என் கண்கள்; படல் ஆற்றா பைதல் உழக்கும் -அத் தீவினையால் தாமும் துயில்கிலவாய்த் துன்பத்தையும் உழவாநின்றன. (காமநோய் காட்சியான் வந்ததாகவின், அதனைக் கண்களே செய்ததாக்கிக் கூறினாள். துன்பம் அழுதலானாயது)

சாலமன் பாப்பையா

கடலைவிடப் பெரிதாகும் காதல் துன்பத்தை எனக்குத் தந்த கண்கள், தாமும் தூங்காமல், துன்பத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.

Meaning in English

The eye that wrought me more than sea could hold of woes, Is suffering pangs that banish all repose

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout