Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1174

இன்பத்துப்பால்கற்பியல்118. கண்விதுப்பழிதல்

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றாஉய்வில்நோய் என்கண் நிறுத்து.

peyalARRA nIrulanta uNkaN uyalARRAuyvilnOy enkaN niRuttu

திருக்குறள் / THIRUKKURAL

பொருள் / உரை

முருகா எளிய உரை

தப்பிப் பிழைக்கவே முடியாத தீராத காதல் பெருந்துன்பத்தை என்னிடத்தில் உண்டாக்கி நிலைநிறுத்திவிட்டு, மை தீட்டிய என் கண்கள் தாமும் தொடர்ந்து அழுவதற்கு வழியின்றித் தம் கண்ணீரும் வறண்டு போய்விட்டனவே!

• உயல் ஆற்றா உய்வு இல் நோய் = தப்பிப் பிழைக்கவே முடியாத தீராத காதல் துன்பத்தை,• என்கண் நிறுத்து = என்னிடத்தில் நிலைபெறச் செய்துவிட்டு;• உண்கண் = அந்த மை தீட்டிய கண்கள்,• பெயல் ஆற்றா நீர் உலந்த = தாமும் தொடர்ந்து அழ முடியாதபடித் தம் கண்ணீரும் வற்றிப் போயின!

மு.வரதராசன்

என் கண்கள், தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும் அழமுடியாமல் நீர் வறண்டு விட்டன.

பரிமேலழகர்

(இதுவும் அது). உண்கண் -உண்கண்கள்; உயலாற்றா உய்வு இல் நோய் செய்வன. என் கண் நிறுத்து-அன்று யான் உய்ய மாட்டாமைக்கு ஏதுவாய ஒழிவில்லாத நோயை என் கண்ணே நிறுத்தி; பெயலாற்றா நீர் உலந்த - தாமும் அழுதலை மாட்டாவண்ணம் நீர் வற்றிவிட்டன. (நிறுத்தல்: பிரிதலும் பின் கூடாமையும் உடையாரைக் காட்டி அதனால் நிலைபெறச் செய்தல். 'முன் எனக்கு இன்னாதன செய்தலாற் பின் தமக்கு இன்னாதன தாமே வந்தன' என்பதாம்.)

சாலமன் பாப்பையா

மை தீட்டப்பட்ட இந்தக் கண்கள் நான் தப்பிக்கவும், வாழவும் முடியாத காதல் துன்பத்தை எனக்குத் தந்துவிட்டுத் தாமும் அழ முடியாமல் நீர் வற்றிப் போய்விட்டன.

Meaning in English

Those eyes have wept till all the fount of tears is dry, That brought upon me pain that knows no remedy

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout