கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்இதுநகத் தக்க துடைத்து.
katumenat tAnOkkit tAmE kaluzhumitunakat takka tuTaittu
Sandhya Parthasarathy
பொருள் / உரை
முருகா எளிய உரை
அன்று காதலரைத் தாமாகவே விரைந்து ஆர்வத்தோடு பார்த்து மகிழ்ந்த இந்தக் கண்கள், இன்று அவரைக் காணாது தாமாகவே இருந்து அழுவதைப் பார்த்தால், நமக்கே சிரிப்புத் தரும் விசித்திரமான செயலாக உள்ளது!
• தாம் கதுமென நோக்கி = அன்று இந்தக் கண்கள் காதலரைத் தாமாகவே விரைந்து பாய்ந்து பார்த்தன;• தாமே கலுழும் இது = இன்று காதலரைக் காணாமல் தாமாகவே அழுது கொண்டிருக்கின்றன;• நகத்தக்கது உடைத்து = கண்களின் இந்த மடைமையான செய்கையானது நமக்கே சிரிப்பை உண்டாக்குவதாக உள்ளது!
மு.வரதராசன்
அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.
பரிமேலழகர்
(இதுவும் அது.) தாம் கதுமென நோக்கித் தாமே கலுழும் இது - இக்கண்கள் அன்று காதலரைத் தாமே விரைந்து நோக்கி இன்றும் தாமே இருந்தழுகின்ற இது; நகத்தக்கது உடைத்து - நம்மால் சிரிக்கத்தக்க இயல்பினை உடைத்து. ('கண்கள்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'இது' என்றது மேற்கூறிய கழிமடச் செய்கையை. அது வருமுன்னர்க் காப்பார்க்கு நகை விளைவிக்கும் ஆகலான் 'நகத்தக்கது உடைத்து' என்றாள்.)
சாலமன் பாப்பையா
அன்றைக்கு அவரை வேகமாகப் பார்த்துவிட்டு, இன்றைக்குத் தனியாக இருந்து இந்தக் கண்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.
Meaning in English
The eyes that threw such eager glances round erewhile Are weeping now. Such folly surely claims a smile





