தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்பைதல் உழப்பது எவன்.
terintuNarA nOkkiya uNkaN parintuNarAppaital uzhappa tevan
Sruthi S Babu
பொருள் / உரை
முருகா எளிய உரை
பிரிவின் பின்விளைவுகளை முன்னரே ஆராய்ந்து பாராமல் அன்று காதலரை ஆர்வத்தோடு நோக்கிய மை தீட்டப்பட்ட கண்கள், 'இது நாமாக வரவழைத்துக் கொண்ட துன்பம்' என்று உணர்ந்து பொறுத்துக்கொள்ளாமல், இன்று அழுது துன்பத்தில் உழல்வது எதற்காக?
• தெரிந்து உணரா நோக்கிய உண்கண் = பிரிவின் விளைவுகளை முன்னரே ஆராய்ந்து அறியாமல் அன்று காதலரை ஆர்வத்தோடு நோக்கிய மைவிழிகள்;• பரிந்து உணரா = 'இது நம்மால் உண்டான துன்பமே' என்று உணர்ந்து அன்புடன் பொறுத்துக்கொள்ளாமல்,• பைதல் உழப்பது எவன் = இன்று இங்ஙனம் அழுது தவித்துத் துன்பத்தில் உழல்வது எதற்காக?
மு.வரதராசன்
ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?
பரிமேலழகர்
(இதுவும் அது.) தெரிந்து உணரா நோக்கிய உண்கண் - மேல் விளைவதனை ஆராய்ந்தறியாது அன்று காதலரை நோக்கி நின்ற உண்கண்கள்; பரிந்து உணராப் பைதல் உழப்பது எவன் - இன்று இது நம்மால் வந்ததாகலின் பொறுத்தல் வேண்டும் எனக் கூறுபடுத்துணராது துன்பம் உழப்பது என் கருதி? (விளைவது: பிரிந்து போயவர் வாராமையின் காண்டற்கு அரியராய் வருத்துதல், முன்னே வருவதறிந்து அது காவாதார்க்கு அது வந்தவழிப் பொறுத்தலன்றேயுள்ளது? அதுவும் செய்யாது வருந்துதல் கழிமடச் செய்கை என்பதாம்.)
சாலமன் பாப்பையா
வரப்போவதை அறியாமல் அன்று அவரை எனக்குக் காட்டிய என் மை தீட்டப்பட்ட கண்கள், இன்று இது நம்மால் வந்தது; நாம்தாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணாமல் துன்பப்படுகின்றனவே எதற்காக?
Meaning in English
How glancing eyes, that rash unweeting looked that day, With sorrow measureless are wasting now away





