Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1171

இன்பத்துப்பால்கற்பியல்118. கண்விதுப்பழிதல்

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்தாம்காட்ட யாம்கண் டது.

kaNTAm kaluzhva tevankolO taNTAnOytAngkATTa yAngkaN Tatu

VY THA RA MOORTHI வை தா ர மூர்த்தி

பொருள் / உரை

முருகா எளிய உரை

தணியாத இந்தக் காதல் பெருந்துன்பத்தை நான் உணர்ந்ததே அன்று இந்தக் கண்கள் எனக்குக் காதலரைக் காட்டியதால் தான்; அவ்வாறிருக்க, இன்று அதே கண்கள் என்னிடம் அவரைக் காட்டித் தருமாறு அழுது வருந்துவது எதற்காக?

• தண்டா நோய் யாம் கண்டது = தணியாத இந்தக் காதல் துன்பத்தை நான் அறிந்துகொண்டதே,• தாம் காட்ட = அன்று இந்தக் கண்கள்தானே எனக்குக் காதலரைக் காட்டித் தந்தன;• கண்தாம் கலுழ்வது எவன்கொல் = அவ்வாறிருக்க, இன்று அதே கண்கள் என்னிடம் காதலரைக் காட்டச் சொல்லிக் கண்ணீர் விட்டு அழுவது எதற்காக?

மு.வரதராசன்

தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?

பரிமேலழகர்

(நின் கண்கள் கலுழ்ந்து தம் அழகு இழவாநின்றன, நீ ஆற்றல் வேண்டும், என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) தண்டா நோய் யாம் கண்டது தாம் காட்ட - இத்தணியா நோயை யாம் அறிந்தது தாம் எமக்குக் காதலரைக் காட்டலானன்றோ; கண் தாம் கலுழ்வது எவன் கொல் - அன்று அத்தொழிலவாய கண்கள், இன்று எம்மைக் காட்டச் சொல்லி அழுகின்றது என் கருதி? ('காட்ட' என்பதற்கு ஏற்ற செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. 'இன்றும் தாமே காட்டுதல் அல்லது யாம் காட்டுதல் யாண்டையது'? என்பதாம்.)

சாலமன் பாப்பையா

தணியாத காதல் துன்பத்தை நான் அறிந்ததே இந்தக் கண்கள் எனக்கு அவரைக் காட்டியதால்தானே? இப்போது அவரைக் காட்டு என என்னிடம் அழுவது எதற்கு?

Meaning in English

They showed me him, and then my endless pain I saw: why then should weeping eyes complain

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout