Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1169

இன்பத்துப்பால்கற்பியல்117. படர்மெலிந்திரங்கல்

கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்நெடிய கழியும் இரா.

koTiyAr koTumaiyin tAmkoTiya innALneTiya kazhiyum irA

Nayomi Sandamali

பொருள் / உரை

முருகா எளிய உரை

காதலரைப் பிரிந்து தவிக்கும் இந்நாட்களில் விடியாமல் நீண்டுகொண்டே செல்லும் கொடிய இரவுகளானது, என்னைப் பிரிந்து சென்ற காதலரின் கொடுமையைக் காட்டிலும் மிகக் கொடியவையாக மாறி என்னை வாட்டி வதைக்கின்றன!

• இந்நாள் நெடிய கழியும் இரா = காதலரைப் பிரிந்து தவிக்கும் இந்நாட்களில் விடியாமல் நீண்டுகொண்டே செல்லும் இரவுகள்;• கொடியார் கொடுமையின் = என்னைப் பிரிந்து சென்ற கொடிய காதலரின் கொடுமையைக் காட்டிலும்,• தாம் கொடிய = தமக்குத் தாமே மிகக் கொடிய கொடுமைகளாக மாறி என்னை வாட்டுகின்றன!

மு.வரதராசன்

( பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையை விடத் தாம் கொடியவை.

பரிமேலழகர்

(இதுவும் அது.) இந்நாள் நெடிய கழியும் இரா - காதலரோடு நாம் இன்புற்ற முன்னாள்களிற் குறியவாய், அவர் பிரிவாற்றேமாகின்ற இந்நாள்களிலே நெடியவாய்ச் செல்கின்ற கங்குல்கள்; கொடியார் கொடுமையின் தாம் கொடிய - அக்கொடியாரது கொடுமைக்கு மேலே தாம் கொடுமை செய்யாநின்றன. (தன்னாற்றாமை கருதாது பிரிதலின், 'கொடியார்' என்றாள். கொடுமை: கடிதின் வாராது நீட்டித்தல். அவர் பிரிவானும் நீட்டிப்பானும் உளதாய ஆற்றாமைக்குக் கண்ணோடாமை மேலும் பண்டையின் நெடியவாய்க் கொடியவாகாநின்றன என்பதாம்.)

சாலமன் பாப்பையா

இப்போதெல்லாம் இரவுகள் கழிவதற்கு நெடும்பொழுது ஆகிறது; என்னைப் பிரிந்து போன என் கணவரின் கொடுமையிலும் இவை மிகக் கொடுமையாக இருக்கின்றன.

Meaning in English

More cruel than the cruelty of him, the cruel one, In these sad times are lengthening hours of night I watch alone

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout