Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1167

இன்பத்துப்பால்கற்பியல்117. படர்மெலிந்திரங்கல்

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்யாமத்தும் யானே உளேன்.

kAmak kaTumpunal nIntik karaikANEnyAmattum yAnE uLEn

Malavika Anilkumar

பொருள் / உரை

முருகா எளிய உரை

காதலாகிய கடுமையான வெள்ளத்தில் விழுந்து தொடர்ந்து நீந்தியும் என்னால் அதன் கரையை எட்ட முடியவில்லை; உலகத்து மாந்தர் அனைவரும் அமைதியாக உறங்கும் நள்ளிரவிலும் கூட, துணையின்றி விழித்துக் கொண்டு நான் மட்டுமே தனியாகத் தவிக்கிறேன்!

• காமக் கடும்புனல் நீந்திக் கரை காணேன் = காதலாகிய கொடிய வெள்ளத்தில் நீந்தியும் என்னால் அதன் கரையை எட்ட முடியவில்லை;• யாமத்தும் = உலகத்து உயிர்கள் அனைத்தும் உறங்கும் நள்ளிரவிலும் கூட,• யானே உளேன் = உறக்கமின்றித் தனியாக அழுது தவித்தபடி நான் மட்டுமே விழித்திருக்கிறேன்!

மு.வரதராசன்

காமம் என்னும்‌ வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.

பரிமேலழகர்

('காமக்கடல் நிறை புணையாக நீந்தப்படும்', என்றாட்குச் சொல்லியது) காமக் கடும்புனல் நீந்திக் கரை காணேன் - காமமாகிய கடல் நீந்தாதேனல்லேன், நீந்தியும் அதற்குக் கரை காண்கின்றிலேன்; யாமத்தும் யானே உளேன் - அக்காணாமைக் காலந்தான் எல்லோரும் துயிலும் அரையிருளாயிற்று, அவ்வரை இருட்கண்ணும் அதற்கு ஒரு துணையின்றி யானேயாயினேன், ஆயும் இறந்துபட்டுய்ந்து போகாது உளனாகாநின்றேன், ஈதொரு தீவினைப்பயன் இருந்தவாறென். (கடுமை, ஈண்டு மிகுதிக்கண் நின்றது. உம்மை முன்னும் கூட்டப்பட்டது. யானே ஆயினேன் என்பது நீ துணையாயிற்றிலை என்னும் குறிப்பிற்று.)

சாலமன் பாப்பையா

காதல் துன்பமாகிய கடலை நீந்தியும் என்னால் கரை காண முடியவில்லை. நள்ளிரவுப் பொழுதினும் உறங்காமல் நான் தனியாகவே இருக்கிறேன்.

Meaning in English

I swim the cruel tide of love, and can no shore descry, In watches of the night, too, 'mid the waters, only I

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout