இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்துன்பம் அதனிற் பெரிது.
inpam kaTalmaRRuk kAmam aஃtaTungkAltunpam ataniR peritu
திருக்குறள் / THIRUKKURAL
பொருள் / உரை
முருகா எளிய உரை
காதலரோடு ஒன்று கூடி மகிழும் போது உண்டாகும் இன்பமானது கடல் போலப் பரந்து விரிந்ததாகும்; ஆனால் அதே காதல் பிரிவினால் உள்ளத்தை வாட்டும் போது ஏற்படும் துன்பமானது, அந்தக் கடலைக் காட்டிலும் மிகப் பெரியதாகும்!
• காமம் இன்பம் கடல் = காதலரைக் கூடித் தழுவும் போது உண்டாகும் இன்பமானது கடல் போலப் பெரிதாகும்;• மற்று அஃது அடுங்கால் = ஆனால் அந்தக் காதலே பிரிவினால் உடலையும் உள்ளத்தையும் வாட்டி வருத்தும் போது,• துன்பம் அதனிற் பெரிது = அதனால் ஏற்படும் துன்பமானது அந்தக் கடலை விடவும் மிகப் பெரிதாகும்!
Murugaa simple commentary
The pleasure that arises when uniting with the lover and rejoicing is broad and expansive like the ocean; but the suffering caused when that same love torments the heart due to separation is much greater than that ocean!
• Love's pleasure is an ocean = The pleasure that arises when uniting and embracing the lover is great like an ocean;• But when it torments = But when that very love withers and torments the body and mind due to separation,• Suffering is greater than that = The suffering caused by it is much greater than that ocean!
Machine translation from the Tamil
மு.வரதராசன்
காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது; அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.
பரிமேலழகர்
('காமத்தான் இன்பமுற்றார்க்கு அதனினாய துன்பமும் வரும்', என்ற தோழிக்குச் சொல்லியது.) காமம் இன்பம் கடல் - காமம் புணர்வால் இன்பஞ்செய்யுங்கால் அவ்வின்பம் கடல் போலப் பெரிதாம்; மற்று அஃது அடுங்கால் துன்பம் அதனிற் பெரிது - இனி அது தானே பிரிவால் துன்பஞ் செய்யுங்கால், அத்துன்பம் அக்கடலினும் பெரிதாம். ('மற்று' வினைமாற்றின்கண் வந்தது. 'அடுங்கால்' என வந்தமையின், மறுதலை யெச்சம் வருவிக்கப்பட்டது. பெற்ற இன்பத்தோடு ஒத்து வரின் ஆற்றலாம்; இஃது அதனது அளவன்று என்பது கருத்து.)
Parimelazhagar
(Spoken to the female friend who said, 'To those who have experienced joy through love, sorrow arising from it will also come.') Love, joy, ocean: when love gives joy through union, that joy is as great as the ocean; whereas when it torments, the sorrow is greater than that: now, when that very love causes sorrow through separation, that sorrow is greater than that ocean. (The word 'matru' occurs in the sense of a contrast of action. Because 'when it torments' is used, the opposite verbal participle has been supplied. The idea is that if the sorrow came in equal measure to the joy obtained, one could endure it; this is not of that measure.)
Machine translation from the Tamil
சாலமன் பாப்பையா
காதல் மகிழ்ச்சி கடல்போலப் பெரிது; ஆனால் பிரிவினால் அது துன்பம் செய்யத் தொடங்கிவிட்டால் அத்துன்பம் கடலைக் காட்டிலும் பெரிது.
Meaning in English
A happy love 's sea of joy; but mightier sorrows roll From unpropitious love athwart the troubled soul

