Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1165

இன்பத்துப்பால்கற்பியல்117. படர்மெலிந்திரங்கல்

துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவுநட்பினுள் ஆற்று பவர்.

tuppin evanAvar mankol tuyarvaravunaTpinuL ARRu pavar

J. Shadhurshana

பொருள் / உரை

முருகா எளிய உரை

பேரின்பம் தரவேண்டிய காதலாகிய நட்புக் காலத்திலேயே என்னைப் பிரிந்து இத்தகைய கொடிய துன்பத்தைத் தரக்கூடிய காதலர், ஒருவேளை என்னிடம் பகைமை கொண்டால் இன்னும் என்னென்ன கொடுமைகளைச் செய்ய வல்லவரோ?

• நட்பினுள் துயர்வரவு ஆற்றுபவர் = இன்பம் தரவேண்டிய காதலாகிய நட்புக் காலத்திலேயே இத்தகைய கொடிய பிரிவுத் துன்பத்தைத் தர வல்லவர்;• துப்பின் = ஒருவேளை பகைமை கொள்ளும் காலத்தில்,• எவன் ஆவர் கொல் = என் மீது இன்னும் என்னென்ன கொடுமைகளைச் செய்ய வல்லவரோ?

மு.வரதராசன்

( இன்பமான) நட்பிலேயே துயரத்தை வரச் செய்வதில் வல்லவர். ( துன்பம் தரும் பகையை வெல்லும்) வலிமை வேண்டும்போது என்ன ஆவாரோ?

பரிமேலழகர்

(தூது விடாமை நோக்கித் தோழியோடு புலந்து சொல்லியது) நட்பினுள் துயர் வரவு ஆற்றுபவர் - இன்பஞ்செய்தற்குரிய நட்பின்கண்ணே துன்பவரவினைச் செய்ய வல்லவர்; துப்பின் எவனாவர் கொல் - துன்பம் செய்தற்குரிய பகைமைக்கண் என் செய்வர் கொல்லோ? (துப்புப் பகையுமாதல், 'துப்பெதிர்ந்தோர்க்கே யுள்ளாச் சேய்மையன் நட்பெதிர்ந் தோர்க்கே அங்கை யண்மையன்' (புறநா.380) என்பதனானும் அறிக. அப்பகைமை ஈண்டுக் காணாமையின், 'அவர் செய்வது அறியப் பெற்றிலேம்' என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது. துயர் வருதலை விலக்கலாயிருக்க அது செய்கின்றிலை எனப் புலக்கின்றமையின், துயர் வரவு செய்தாளாக்கியும் பிறளாக்கியும் கூறினாள்.)

சாலமன் பாப்பையா

இன்பம் தருவதற்குரிய நட்பிலேயே துன்பத்தைத் தரம் இவர், பகைமையில் என்னதான் செய்வாரோ?

Meaning in English

Who work us woe in friendship's trustful hour, What will they prove when angry tempests lower

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout