கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்நடுவொரீஇ அல்ல செயின்.
keTuvalyAn enpa taRikatan nenjsamnaTuvorIi alla seyin
Ramana Balachandhran
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒருவனது மனம் நடுவுநிலைமையை விட்டு விலகி அநீதி செய்ய நினைத்தாலே, தான் கெட்டழியப் போகிறோம் என்பதற்கான முன் எச்சரிக்கை அறிகுறி அது என்பதை அவன் உடனே உணர்ந்து திருந்த வேண்டும்.
• தன் நெஞ்சம் = தன் உள்ளமானது• நடுவொரீஇ = நடுவுநிலைமையை விட்டு விலகி• அல்ல செயின் = அநீதியான தவறுகளைச் செய்ய நினைத்தாலே,• யான் கெடுவல் = 'நான் அழியப் போகிறேன்'• என்பது அறிக = என்பதற்கான எச்சரிக்கை அறிகுறியாக அதை உணர வேண்டும்.
மு.வரதராசன்
தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.
பரிமேலழகர்
தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின் - ஒருவன் தன் நெஞ்சம் நடுவு நிற்றலை ஒழித்து நடுவல்லவற்றைச் செய்ய நினைக்குமாயின்; யான் கெடுவல் என்பது அறிக - அந்நினைவை 'யான் கெடக்கடவேன்' என்று உணரும் உற்பாதமாக அறிக. (நினைத்தலும் செய்தலோடு ஒக்கும் ஆகலின், 'செயின்' என்றார்.)
சாலமன் பாப்பையா
தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.
Meaning in English
If, right deserting, heart to evil turn, Let man impending ruin's sign discern





