கெடுவாக வையாது உலகம் நடுவாகநன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
keTuvAka vaiyA tulakam naTuvAkananRikkaN tangkiyAn tAzhvu
Sriraman
பொருள் / உரை
முருகா எளிய உரை
நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் நேர்மையாக வாழ்கின்ற ஒருவனுக்கு வறுமை நிலை ஏற்பட்டாலும், உயர்ந்த சான்றோர் உலகம் அதனை இழிவான கேடாகக் கருதாமல், போற்றத்தக்க பெருமையாகவே மதிக்கும்.
• நடுவாக = நடுவுநிலைமையோடு• நன்றிக்கண் தங்கியான் = அறநெறியில் நிலைத்து வாழ்கின்ற ஒருவனது• தாழ்வு = வறுமை நிலையை (பொருளாதாரத் தாழ்வை),• உலகம் = உயர்ந்த சான்றோர் உலகம்• கெடுவாக வையாது = இழிவான கேடாகக் கருதாது (பெருமையாகவே போற்றும்).
மு.வரதராசன்
நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.
பரிமேலழகர்
நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு - நடுவாக நின்று அறத்தின் கண்ணே தங்கியவனது வறுமையை; கெடுவாக வையாது உலகம் - வறுமை என்று கருதார் உயர்ந்தோர். (கெடு என்பது முதல்நிலைத் தொழிற்பெயர். 'செல்வம் என்று கொள்ளுவர் என்பது குறிப்பெச்சம். இவை மூன்று பாட்டானும் முறையே கேடும் பெருக்கமும் கோடுதலான் வாரா என்பதூஉம். கோடுதல் கேட்டிற்கேதுவாம் என்பதூஉம், கோடாதவன் தாழ்வு கேடு அன்று என்பதூஉம் கூறப்பட்டன.)
சாலமன் பாப்பையா
நீதி என்னும் அறவாழ்வு வாழ்ந்தும் ஒருவன் வறுமைப்பட்டுப் போவான் என்றால், அதை வறுமை என்று உயர்ந்தோர் எண்ணவேமாட்டார்.
Meaning in English
The man who justly lives, tenacious of the right, In low estate is never low to wise man's sight





