Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1159

இன்பத்துப்பால்கற்பியல்116. பிரிவாற்றாமை

தொடிற்சுடின் அல்லது காமநோய் போலவிடிற்சுடல் ஆற்றுமோ தீ.

toTiRsuTin allatu kAmanOy pOlaviTiRsuTal ARRumO tI

Sivaranjini

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• தீ தொடின் சுடின் அல்லது = நெருப்பானது தன்னைத் தொட்டால் மட்டுமே சுடும் அல்லாமல்;• காமநோய் போல = காமமாகிய பிரிவு நோயைப் போல,• விடின் சுடல் ஆற்றுமோ = தன்னைத் தொடாமல் விலகிப் பிரிந்திருக்கும் போதிலும் சுட வல்லதாகுமோ? (நெருப்பால் முடியாது, பிரிவால் மட்டுமே முடியும்!).எளிய விளக்கம்:நெருப்பானது தன்னைத் தொடும் போது மட்டுமே சுடுமே அன்றி, காதலாகிய பிரிவு நோயைப் போல விலகிப் பிரிந்திருக்கும் போதிலும் உடலையும் உள்ளத்தையும் சுட்டெரிக்கும் ஆற்றல் கொண்டதாகுமோ?

மு.வரதராசன்

நெருப்பு, தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காமநோய் போல் தன்னை விட்டு நீங்கிய பொழுது சுடவல்லதாகுமோ.

பரிமேலழகர்

(காமம் தீயே போன்று தான் நின்ற இடத்தைச் சுடுமாகலான் நீ ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது.) தீத்தொடின் சுடின் சுடலல்லது - தீத்தன்னைத் தொட்டாற் சுடுமாயின் சுடுதல்லது; காமநோய் போலவிடின் சுடல் ஆற்றுமோ - காமமாகிய நோய் போலத் தன்னை அகன்றால் தப்பாது சுடுதலை வற்றோ! மாட்டாது. (சுடுமாயின் என்பது, மந்திர மருந்துகளான் தப்பிக்கப்படாதாயின் என்றவாறு. காமத்திற்கு அதுவும் இல்லை என்பாள், வாளா 'சுடல்' என்றாள். அகறல்: நுகராமை. 'சுடல்' என்பது முன்னும் கூட்டப்பட்டது. 'தீயினும் கொடியதனை யான் ஆற்றுமாறு என்னை' என்பதாம்.)

சாலமன் பாப்பையா

தீ தன்னைத் தொட்டவரைத்தான் சுடும்; காதல் நோயைப் போல அதை விட்டு அகன்றாலும் சுடுமோ?

Meaning in English

Fire burns the hands that touch; but smart of love Will burn in hearts that far away remove

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout