ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்நீங்கின் அரிதால் புணர்வு.
Ompin amaintAr pirivOmpal maRRavarnIngkin aritAl puNarvu
M. D. Aparna Madhan
பொருள் / உரை
முருகா எளிய உரை
தோழியே, என் உயிரைப் பாதுகாக்க விரும்பினால், என் உயிருக்கு உயிராக அமைந்த காதலர் பிரிந்து செல்லாதபடி தடுத்து நிறுத்துவாயாக; அவர் என்னை விட்டுப் பிரிந்தால் என் உயிர் பிரிந்துவிடும், பிறகு மீண்டும் அவரைக் கூடுவது அரிதாகிவிடும்!
• ஓம்பின் = என் உயிரைக் காப்பாற்ற விரும்பினால்,• அமைந்தார் பிரிவு ஓம்பல் = என் உயிருக்குத் தலைவராக அமைந்த காதலர் என்னைப் பிரிந்து செல்லாமல் தடுத்துக் காப்பாயாக;• மற்று அவர் நீங்கின் = அவர் என்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டால்,• புணர்வு அரிது = பிரிவைத் தாங்காது உயிர் போய்விடும் என்பதால் மீண்டும் அவரைக் கூடுவது அரிதாகிவிடும்!
மு.வரதராசன்
காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும், அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது.
பரிமேலழகர்
(இதுவும் அது.) ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் - என்னுயிரைச் செல்லாமல் காத்தியாயின், அதனை ஆளுதற்கு அமைந்தாருடைய செலவினை அழுங்குவிப்பாயாக; மற்று அவர் நீங்கின் புணர்வு அரிது - அழுங்குவிப்பாரின்றி அவர் செல்வராயின், அவரால் ஆளப்பட்ட உயிரும் செல்லும்; சென்றால் பின் அவரைக் கூடுதல் எனக்கு அரிதாம். (ஆளுதற்கு அமைதல்: இறைவராதற்குத் தெய்வத்தால் ஏற்புடையராதல். மற்று: வினைமாற்றின்கண் வந்தது.)
சாலமன் பாப்பையா
என் உயிரைக் காக்க எண்ணினால் அதைக் காப்பதற்கு உரிய அவர், என்னை விட்டுப் பிரிவதைத் தவிர்க்க வேண்டும். மீறிப் பிரிந்தால் நான் இனி அவரைச் சேர்வது அரிது.
Meaning in English
If you would guard my life, from going him restrain Who fills my life! If he depart, hardly we meet again





