அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்பிரிவோ ரிடத்துண்மை யான்.
aritarO tERRam aRivuTaiyAr kaNNumpirivO riTattuNmai yAn
Preeti Sethuraman
பொருள் / உரை
முருகா எளிய உரை
பிரிவின் பெருந்துன்பத்தை உணர்ந்த அறிவுடைய என் காதலரிடத்திலும் ஏதோ ஒரு காரணத்தால் பிரிவு நேர்ந்துவிடுவதால், 'உன்னை எக்காலத்திலும் பிரிய மாட்டேன்' என்று அவர் கூறிய உறுதிமொழியை நம்பி அமைதி கொள்வது அரிதாகிவிட்டது!
• அறிவுடையார் கண்ணும் = என் பிரிவுத் துன்பத்தை நன்கு அறிந்த பேரறிவுடைய என் காதலரிடத்திலும்,• ஓர் இடத்துப் பிரிவு உண்மையான் = எப்போதோ ஒரு சமயம் பிரிந்து செல்லும் நிலைமை ஏற்படுவதால்;• தேற்றம் அரிது = 'உன்னை ஒருபோதும் பிரியேன்' என்று அவர் கூறிய உறுதிமொழியை நம்பித் தெளிவது அரிதாகிவிட்டது!
மு.வரதராசன்
அறிவுடைய காதலரிடத்தும் பிரிவு ஒரு காலத்தில் உள்ள படியால் அவர் பிரியேன் என்று சொல்லும் உறுதி மொழியை நம்பித் தெளிவது அரிது.
பரிமேலழகர்
(இதுவும் அது.) அறிவு உடையார் கண்ணும் - பிரியேன் என்ற தம் சொல்லும் நம் பிரிவாற்றாமையும் அறிதலுடையராய காதலர் கண்ணும்; ஓர் இடத்துப் பிரிவு உண்மையான் - ஒரோவழிப் பிரிவு நிகழ்தலான்; தேற்றம் அரிது - அவர் சொல்லும் தலையளியும் பற்றி நம்மாட்டு அன்புடையார் எனத்தேறும் தேற்றம் அரிதாயிருந்தது. (அரோ: அசைநிலை. உம்மை உயர்வு சிறப்பின்கண் வந்தது.)
சாலமன் பாப்பையா
எல்லாம் அறியும் ஆற்றல் உடைய அவரும் ஒருநேரம் பிரிவார் என்றால், என்மீது அவர் கொண்டிருக்கும் அன்பை அறிந்து கொள்ள முடியவில்லை.
Meaning in English
To trust henceforth is hard, if ever he depart, E'en he, who knows his promise and my breaking heart





